Skip to content
Showing posts with label GENERAL TIPS. Show all posts
Showing posts with label GENERAL TIPS. Show all posts

உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?

உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?

பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.

ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில்

நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

Non-Stick Cookware Dangers: Hundreds of Scientists Issue Warning:

நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்தால் சர்க்கரை நோய் வருமா?
நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்தால் சர்க்கரை நோய் வருமா?
மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.

Basic Tips to Keep Children in Child Care Safe Outdoors

சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
1. இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.

The Risks of Eating Too Much Pepper:

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.