Skip to content
Showing posts with label MBBS ADMISSION. Show all posts
Showing posts with label MBBS ADMISSION. Show all posts

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்:

 

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் பயில இடம் கிடைத்தும், அதிகளவு கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்றும், இவை அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் என்றாலும், மறைமுகமாக 3 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக தனியார் கல்லூரிகளால் வசூலிக்கப்படுகின்றன என குற்றம்சாட்டினார்.

சமூகநீதியின் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஏற்பாடு செய்த தமிழக அரசு, கட்டணம் செலுத்துவதற்கும் உதவி செய்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க உதவ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கு, அரசே கட்டணம் செலுத்துவதன் மூலம் தனியார் கல்லூரிகளில் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப் படுவதையும் தடுக்கலாம் என்றும், அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையில் ஈடுசெய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

எனவே, மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேரத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்ற வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் :

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

நேற்று துவங்கிய, முதல் நாள் கவுன்சிலிங்கில், விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்து, மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதற்கு காரணமான, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நன்றி தெரிவித்தனர். 'பல தடைகளை கடந்து, இந்த உள் ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்திருப்பதாலும், அதன் வாயிலாக, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி இருப்பதாலும், இது மறக்க முடியாத நாள்' 

இந்த கல்வியாண்டு முதல், மருத்துவ படிப்பில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேருவதற்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசால் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, கவுன்சிலிங் துவக்கமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று துவங்கியது; நாளை முடிகிறது.இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 313எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 92 பி.டி.எஸ்., இடங்கள்என, 405 இடங்கள், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.முதல் நாளான நேற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில், அறிவிக்கப்பட்ட தர வரிசையின்படி, 267 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கையை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இவர்களில், அர்ச்சனா என்ற மாணவிக்கு, அவரே வெள்ளை நிற அங்கியையும், ஸ்டெதஸ்கோப்பையும் கையில் கொடுத்து அணிய செய்தார். அப்போது, ஆனந்த கண்ணீர் வடித்த மாணவர்களும், பெற்றோரும், முதல்வர்இ.பி.எஸ்., காலில் விழுந்து, நன்றி தெரிவித்தனர்.தொடர்ந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை உறுதி செய்த, அரசு பள்ளி மாணவர்களுடன், முதல்வர் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, மாணவர்கள், '7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி' என்ற, வாசகங்கள் எழுதப்பட்ட பலுான்களை பறக்க விட்டனர்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:இந்த நாள், என் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான, மறக்க முடியாத நாள். தமிழக வரலாற்றில், ஒரு பொன்னான நாள். அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில், திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள். 


அரசு பள்ளியில் படித்தேன் என்ற முறையில், எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்திய திருநாள்.இது, ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதில் எனக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நாள்.இந்த அரசு, 'நீட்' தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.


தமிழகத்தில், பிளஸ் 2 படிப்பவர்களில், 41 சதவீத மாணவர்கள், அரசு பள்ளிகளில் படிப்பவர்கள். கடந்தாண்டில், ஆறு மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் தேர்வாகினர். இந்நிலையை மாற்ற, நான் உறுதியாக இருந்தேன்.அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ கனவு லட்சியத்தை நிறைவேற்ற முடிவு செய்து, பல தடைகளை தாண்டி, சட்டத்தை கொண்டு வந்து, ஏழை, எளிய மாணவர்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. 



இதுவரை, உங்களது குடும்பம், எவ்வாறாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இனிமேல், 'மருத்துவர் குடும்பம்' என்றே, அடையாளம் காணப்படும்.

மேலும், இம்மாணவர்களின் ஏழ்மை நிலைமை கருதி, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாதவாறு, ‛போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவி தொகை மற்றும் இதர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வாயிலாக இடம் கிடைப்பதற்கு, எதிர்க்கட்சியும் குரல் கொடுக்கவில்லை; மக்களும் கருத்து தெரிவிக்கவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும், 41 சதவீதம் மாணவர்களில், ஆறு பேர் தான் மருத்துவ படிப்பில் இடம் பெற்றனர் என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் என்ற அடிப்படையில், இந்த சட்டத்தை கொண்டு வந்தோம்.

ஏழைகளுக்கும், மருத்துவ கல்வி கிடைக்கக்கூடிய வசதியை, இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அவர்களுக்கு தேவையான உதவியை தொடர்ந்து செய்யும். கிராமம் முதல் நகரம் வரை, ஏழைகள் நிறைந்த பகுதியில், நல்ல தரமான மருத்துவ சிகிச்சை செய்ய, இப்படிப்பட்ட மாணவர்களை, அரசு ஊக்குவிக்கும். ஏழ்மையை உணர்ந்தவர்கள் என்பதால், அர்ப்பணிப்புடன், கிராமப்புறங்களிலும் மருத்துவ சேவையை, இம்மாணவர்கள் செய்வர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதலமைச்சர் நாளை துவக்கி வைக்கிறார்:

 

ளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு துவக்கி வைக்க இருக்கிறார்.

சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் துவக்கி வைக்க இருப்பதால், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கலந்தாய்வில், தினமும் 3 கட்டங்களாக தலா 175 மாணவர்கள், கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக உணவு, வாகன வசதி, தங்கும் இடம் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்:

 

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் தர வரிசைப் பட்டியலில் இடம்பிடித்த அரசு பள்ளி மாணவர்களில் பலரும் குடும்ப பின்னணி, வறிய நிலை வாழ்க்கைச் சூழல் போன்ற தடைகளைத் தகர்த்து முன்னேறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் ஆணையைத் தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (நவம்பர் 16) வெளியிட்டார்.

முற்றிலும் பறிபோன தமிழக அரசின் மருத்துவப் படிப்புகள் மீட்கப்படவேண்டும்: சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்:The medical courses of the state of Tamil Nadu, which were completely snatched away, must be restored: the Doctors' Association for Social Equality


உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான, நூறு விழுக்காடு இடங்களின் மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையையும், மீண்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட வேண்டும். அகில இந்தியத் தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

MBBS APPLICATION RELATED NEWS:

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.