Skip to content

Cipet Recruitment 2021 : சென்னையில் மத்தியஅரசு நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு :

சென்னை: சென்னையில் உள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் நிறுவனத்தில் தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வேலைகள் காத்துக் கொண்டிருக்கிறது. '

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை மறைந்து கிடக்கும. அந்த திறமை என்ன என்பதை கண்டுபிடித்து, அதில் பயிற்சியும் முயற்சி செய்தால் பெரிய வெற்றிகளை பெற முடியும்.

எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தங்களுக்கான வேலையை அடையாளம் கண்டு முன்னேறுங்கள். சென்னையில் உள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் நிறுவனத்தில் மேலாளர் உள்பட சில பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.,


முக்கிய தகவல்கள்

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விவரங்கள்:

வேலை தரும் நிறுவனம்: மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்)

வேலைகளின் வகை: மத்திய அரசு வேலைகள்
பதவிகளின் பெயர் தலைமை மேலாளர், மேலாளர் (பி & ஏ), மேலாளர் (நிதி)

காலியிடங்கள்: 03

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22:3.2021

ஊதியம்


விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் டிகிரி, சி.ஏ, ஐ.சி.டபிள்யூ.ஏ, எஸ்.ஏ.எஸ், எம்பிஏ, பி.ஜி டிப்ளோமா, முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
தலைமை மேலாளர் (பி & ஏ) - 1,23,100 / - + படிகள்

மேலாளர் (பி & ஏ) - 788,00 / - + படிகள்
மேலாளர் (நிதி) - 78,800 / - + படிகள்

வயது

தேர்வு செய்வதற்கான செயல்முறை

1.ஆன்லைன் சோதனை

2. திறன் சோதனை

3. நேரடி நேர்காணல்

வயது வரம்பு : குறைந்தபட்ச வயது: 18 வயது. அதிகபட்ச வயது: 45 வயது

தலைமை மேலாளர் பதவிக்கு: அதிகபட்ச வயது- 50 வயது

விண்ணப்பம் / தேர்வு கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் இல்லை

எப்படி

எப்படி விண்ணப்பிப்பது: அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.cipet.gov.in ஐ பாருங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி மூலம் விண்ணப்பிக்கவும் விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
முகவரி:
மேலாளர் (பி & ஏ),
சிபெட் தலைமை அலுவலகம்,
டி.வி.கே. தொழிற்பேட்டை,
கிண்டி,
சென்னை - 600 032.

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 17.02.202 1

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 22.03.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். ரயில்வேயில் அருமையான வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

< /p>

ரயில்வே துறையில் வெளியாகியுள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: டீசல் லோகோ நவீனமயமாக்கல்

பதவி: அப்ரண்டீஸ்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

காலி பணியிடங்கள்: 182

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 மார்ச் 2021

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு 100, எஸ்டி ,எஸ்சி களுக்கு கட்டணம் இல்லை.

சம்பளம்: அப்ரண்டிஸ் பலருக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முதல் ஆண்டில் நீங்கள் மாதத்திற்கு 7000 ரூபாய் சம்பளமும், இரண்டாம் ஆண்டில் 7700, மூன்றாம் ஆண்டில் 8050 ரூபாயும் சம்பளமாக பெறுவீர்கள்.

இந்த காலியிடங்களுக்கு http://dmw.indianrailways.gov.in.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் வங்கியில் பணியாற்றலாம் வாங்க!

 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், Faculty, Attendant, காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா (BOI)

மேலாண்மை : மத்திய அரசுப் பணி

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி : Faculty, Office Assistant, Attendant மற்றும் Watchman

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடத்திற்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பணியிடத்திற்கும் வயது வரம்பு மாறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் 20,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://bankofindia.co.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் Presentation மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப் படிவத்தினைப் பெறவும் www.bankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

10,12-வது தேர்ச்சியா. மாதம் ரூ.25,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Mess Staff, MTS, Laundryman, Cook, Painter

காலிப்பணியிடங்கள்: 257

கல்வி தகுதி: 10, 12 தேர்ச்சி

சம்பளம்: ரூபாய் 25 ஆயிரம்

கடைசி தேதி: 21.03.2021

மேலும் விவரங்களுக்கு https://indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர் சங்கம் தொடுத்த வழக்கின் சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பின் நகல்:









BE / ITI / Diplomo முடித்தவர்களுக்கு.. ரூ.1,12, 400 சம்பளத்தில அரசு வேலை.. உடனே போங்க.!!!

 

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : இன்ஜினியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராஃபர்.

தகுதி: எலக்ட்ரிக்கல், சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ .

சம்பளம்: ரூ35,400- ரூ1,12,400.

மேலும் விவரங்களுக்கு https://www.cpri.in/careeers.html

கடைசி தேதி: 5.4.2021

 

B.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். மத்திய அரசு வேலை.!!!

இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய உணவு கழகத்தில் General Administration, Technical Accounts, Las உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவி மேலாளர்.
காலி பணியிடங்கள்: 89
கல்வித்தகுதி: B.Tech, B.E, BSc Agri, Law, CA.
சம்பளம்: 1,80,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www. recruitmentfic.in/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு.. ரூபாய் 35 ஆயிரம் சம்பளத்தில்.. அருமையான வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் பல பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த பணிகளில் சேர விரும்புவோர், வெளியிடப்பட்ட அறிவிப்பை முழுமையாகப் படித்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..

பணி: தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (என்.எம்.டி.சி) கள உதவியாளர், பராமரிப்பு உதவியாளர்

காலியிட விவரங்கள் : 304

தகுதி : இ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி , ஐ.டி.ஐ

சம்பளம்:மாதம் : ரூ .18100-ரூ. 35040.

விண்ணப்பிக்கும் கால அவகாசம் : மார்ச் 11, 2021 முதல் ஏப்ரல் 20, 2021

வயது வரம்பு :இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவலுக்கு, நீங்கள் அறிவிப்பைப் பார்க்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.nmdc.co.in/

விண்ணப்பக் கட்டணம்:பொது பிரிவினருக்கு ரூ. 150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

B.E/ B.Tech பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். திருச்சி என்.ஐ.டியில் வேலை.!!!


திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
பணி: project staff
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: B.E/ B. Tech
பணியிடம்: திருச்சி
தேர்வு முறை: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 20

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 32% அகவிலைப்படி – உண்மை நிலவரம் என்ன?

 

மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வினை மீண்டும் வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் ஜூலை 2021 முதல் 32 சதவீத அகவிலைப்படி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


அகவிலைப்படி உயர்வு:

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வருடம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வரிவசூல் பாதிக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிதி பற்றாக்குறை உருவானது. இதனை சரிசெய்யும் பொருட்டு ஜனவரி 2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

இது ஜூலை 2021 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த உத்தரவினை திரும்ப பெரும் நேரத்தில் மத்திய அரசு துறைகளில்

பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரிய பயனை அடைவார்கள் என கூறப்படுகிறது. அதாவது ஜனவரி 2020 இல் DA 4%, ஜூலை 2020 இல் 3% அதிகரிப்பு ஏற்படும். இப்போது 2021 ஜனவரியில் 4% உயரும். இதன் மூலம் DA 17% -லிருந்து 28% வரை உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில் ஜூன் 2021 க்குள் DA மேலும் 3-4% அதிகரிக்கக்கூடும். இதன் மூலம், ஜூன் 2021 இல் தடையை நீக்கிய பின்னர் DA 30-32% ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மத்திய

அரசால் DA நிறுத்தப்பட்ட போது, ​​2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை அரியர் தொகை எதுவும் பெறப்பட மாட்டாது என உத்தரவில் தெளிவாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு - ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அரசு வேலைவாய்ப்பு.!

 


HCL அதிகாரபூர்வ இணையதளத்தில் Assistant Foreman (Mining), Mining Mate Grade-I காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, Diploma கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Balaghat ) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Written Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : HCL

பணியின் பெயர் : Assistant Foreman (Mining), Mining Mate Grade-I

கல்வித்தகுதி : 10th, Diploma

பணியிடம் : Balaghat

தேர்வு முறை : Written Test

சம்பளம் :

Assistant Foreman (Mining) Rs.18480-45400/-
Mining Mate Grade-I - 18280-38670/-

மொத்த காலிப்பணியிடம் : 26

கடைசி நாள் : 20.03.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://www.hindustancopper.com/Upload/Notice/0-637505640603105000-NoticeFILE.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

NTA-இல் 58 காலியிடங்கள்.. மார்ச்-15 வரை நீட்டிப்பு.. உடனே போங்க.!!

 


தேசிய தேர்வு முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேசிய தேர்வு முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NTA

காலியிடங்கள்: குரூப் பி பிரிவில்- 18 ,குரூப் பி பிரிவில் -24, குரூப் சி பிரிவில் -16.

கடைசி தேதி: மார்ச் 16 வரை நீட்டிப்பு.

பணி இடங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

12 வது தேர்ச்சியா? இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..


இந்திய விமான படையில் இருந்து தற்போது திருமணமாகாத ஆண் இந்திய குடிமக்கள்/ நேபாலீஸ் குடிமக்கள் ஆகியோருக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Group 'Y' (Non-Technical Trades) பணிகளுக்கு விளையாட்டு கோட்டாவில் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியுடையோர் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

Group 'Y' (Non-Technical Trades) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Intermediate / 10+2 / Class XII அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
பதிவு செய்வோருக்கான தேர்வுகள் அனைத்தும் வரும் 26.04.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் ஒரு தாளில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி போல் விண்ணப்பங்களை நிரப்பி அதனுடன் கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து iafsportsrec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு நடைபெறுவதற்கு முன்னர் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official PDF Notification – https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/Approved%20Advertisement%20for%20Recruitment%20of%20Outstanding%20Sportsmen%20for%20IPT%20Intake

வேலைவாய்ப்பு: ரூ.35,000 வரை சம்பளம். பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் வேலை. உடனே விண்ணபிக்கவும்..!!

பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம். (BDU-Bharathidasan University)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி - தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வேலை: Junior Research Fellow (JRF)

கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bdu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - Dr. P. Muruganandam, Professor, Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli - 620024

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1glamjRlMyEE-Ko8xDceYE5_goYKCENSF/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2021

சட்டசபை தேர்தலுக்கு பின் பிளஸ் 2 செய்முறை தேர்வு (Dinamalar):

 

பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்தலுக்கு பின் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதுவரை பாடங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மே, 3ல் துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு தேதிக்கு முன், ஏப்., 6ல் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து விடுகிறது. இதனால், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும், அவர்களுக்கான பாடங்களை உரிய காலத்தில் முடிக்கவும், போதிய கால அவகாசம் கிடைத்து உள்ளது.

எனவே, இந்த அவகாசத்தை பயன்படுத்தி, பிளஸ் 2 செய்முறை தேர்வை, சட்டசபை தேர்தலுக்கு பின், ஏப்ரலில் நடத்தி கொள்ள பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.அதுவரை, மாணவர்களுக்கு பாடங்களை தொடர்ந்து நடத்தவும், திருப்புதல் தேர்வுகளை நடத்தி, மாணவர்களை பொதுதேர்வுக்கு தயார்படுத்தவும், பள்ளி ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

பொதுப்பணித்துறை.. நெடுஞ்சாலைத்துறையில் பணி - TNPSC அதிரடி அறிவிப்பு.!!

 

பொதுப்பணித்துறை.. நெடுஞ்சாலைத்துறையில் பணி - TNPSC அதிரடி அறிவிப்பு.!!

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு TNPSC அறிவித்துள்ளது.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: 531.

பணி: இளநிலை பொறியாளர்.

தேர்வு தேதி: ஜூன் 6 .

விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: மார்ச் 5.

கடைசி தேதி: ஏப்ரல் 4 .

மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in .

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

பட்டதாரி இளைஞர்களுக்கு சென்னை சித்தா மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை வாய்ப்பு!

 
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.28 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விசுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (CCRS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Research Fellow (SRF)

மொத்த காலிப் பணியிடம் : 01 

அனைத்து பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான STUDY MATERIALS AND QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.

கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Visual Communication துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.siddhacouncil.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து crisiddha@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.siddhacouncil.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

10-வது தேர்ச்சியா? சென்னையிலேயே மத்தியஅரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

10-வது தேர்ச்சியா? சென்னையிலேயே மத்தியஅரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள பெண்கள் விடுதி காப்பாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியித்திற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அனைத்து பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான STUDY MATERIALS AND QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.

நிர்வாகம் : கலாக்ஷேத்ரா பவுண்டேஷன் (Kalakshetra Foundation)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : சென்னை

பணி : பெண்கள் விடுதி காப்பாளர்

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆங்கிலத்தில் நன்கு உரையாடத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 30 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.19,864 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kalakshetra.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 15.03.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Kalakshetra Foundation (An autonomous body under Ministry of Culture, Government of India) Thiruvanmiyur, Chennai - 600 041

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kalakshetra.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அனைத்து பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான STUDY MATERIALS AND QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.

நிர்வாகம் : கெயில் (GAIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 25

பணி : நிர்வாகப் பயிற்சியாளர்

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ. 1,80,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.gailonline.com என்னும் இணையதளத்தின் மூலம் 16.03.2021ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : GATE-2021 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.03.2021

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://gailonline.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

தகுதி : B.E,B.Tech_Diploma _நிறுவனம் தமிழக அரச_மாத சம்பளம் 39900-113500_விண்ணப்பிக்க கடைசி தேதி 04.04.2021:

Tamil Nadu Public Service Commission எனப்படும் தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து ஜூனியர் டிராக்டிங் அதிகாரி, ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது மார்ச் 5 ஆம் தேதி வெளியாகி உள்ளது.

இந்த அரசு பதவிக்கு மொத்தம் 537 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 அனைத்து பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான STUDY MATERIALS AND QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் வயதானது 1 ஜூலை 2021 தேதியின் படி, அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் SCs/SC(A)s/STs விண்ணப்பத்தர்களுக்கு அதிகபட்ச வயதானது 33 க்குள் இருக்க வேண்டும். MBCs/DCs / BCs/BCMs விண்ணப்பத்தர்களுக்கு அதிகபட்ச வயதானது 32 க்குள் இருக்க வேண்டும்.

டிப்ளோமாவில் கட்டடக்கலை உதவியாளர்/ சிவில் இன்ஜினியரிங்/ ஜவுளி உற்பத்தி அல்லது குறைந்தபட்ச பொது கல்வி தகுதி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.35400 முதல் ரூ.112400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. Junior Engineer பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்க்கு ரூ.35900-113500 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Official PDF Notification – https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf

Apply Online – https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==