
அதிலும் கருப்பு திராட்சைக்கு ஏராளமான நல்ல குணங்கள் உண்டு. நம் உடலுக்கு அது பல சத்துக்களையும் உருவாக்கும். ஒரு கையளவு கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பல நன்மைகளும் கிடைக்கும். கருப்பு திராட்சையில் பாலிபீனால்கள் உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது. அதேபோல் கருப்பு திராட்சை புற்றுநோய் வராமலும் எதிர்த்து போரிடும்.
அதேபோல் கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு வயிற்றுப்_பிரச்னைகளும் தீரும். வயிறு உப்பிசம், அஜீரணக்கோளறும் நீங்கும். இதேபோல் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் கருப்பு திராட்சை முக்கியப்பங்கு வகிக்கிறது. யூரிக் அமில அளவைக் குறித்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து சிறுநீரகத்தை ஆரோக்கியம் ஆக்கும். கருப்பு திராட்சை சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
கொலஸ்டிராலை சமநிலையோடு வைத்திருக்கும். சீக்கிரம் முதுமை எட்டாமலும், சருமம் வறட்சியை அடையாமலும் பார்த்துக்கொள்ளும். அதேபோல் கருப்பு திராட்சையின் விதைகளை அரைத்து, அதனை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முடி உதிர்வு, பொடுகு பிரச்னை தீரும். கண்கள் ஆரோக்கியத்திலும் கருப்பு திராட்சை முக்கியப்பங்கு வகிக்கிறது. தினம் ஒரு கையளவு திராட்சை சாப்பிட்டால் போதும். கருப்பு திராட்சை ஜீஸ் தினமும் காலையில் குடித்துவர ஒற்றைத் தலைவலியும் போய்விடும். மலச்சிக்கலையும் தடுக்கும்.
கரும்பு திங்க கூலியா? எனக் கேட்பதைப்போல் நாமும் தினமும் ஒரு கையளவு இனி கருப்பு திராட்சையை சாப்பிடுவோம்.