கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் 100% திறக்கப்படவில்லை. சில மாதங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாலும் கொரோனா தொற்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பல மாநிலங்கள் பள்ளிகள் திறக்கும் திட்டத்தை தள்ளி போட்டுள்ளது. தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் பொது தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.
பொதுத் தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்ற கருத்தும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என சிபிஎஸசி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்சி அமைப்பு நிர்வாகிகள் குழு செயலாளர் அனுராக் திரிபாதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். விரைவில் பொது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.