Skip to content
Showing posts with label HEALTH TIP. Show all posts
Showing posts with label HEALTH TIP. Show all posts

இன்று உலக சர்க்கரை நோய் தினம்: இன்சுலின் சுரப்பு இல்லாதவர்களும் இயல்பான வாழ்க்கை வாழலாம்:Happy news for pension buyers ... Easy to buy pension now !!


உலக சர்க்கரை நோய் தினத்தை (நவ.14) முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையின் சர்க்கரை நோய் துறை தலைவர் டாக்டர் வெங்கோஜெயபிரசாத் கூறியதாவது: இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தியாகும் ஒருவகை ஹார்மோன் ஆகும். நாம் எதைச் சாப்பிட்டாலும், சாப்பாட்டில் இருக்கும் சர்க்கரை ரத்தத்தில் கலந்துவிடும். ரத்தக்குழாய்கள் மூலம் இந்த சர்க்கரை அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. காற்று, தண்ணீர், சர்க்கரை ஆகிய மூன்றும் எரிந்து, அதில் கிடைக்கும் ஆற்றல்மூலம்தான் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் வேலைசெய்கிறது. ரத்தக்குழாயில் இருந்து ஒவ்வொரு செல்லுக்கும் எவ்வளவு சர்க்கரை தேவைப்படுகிறது என்பதை இன்சுலின் முடிவுசெய்கிறது. இன்சுலின் சுரப்பு இல்லையெனில் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்காமல் செயல் இழந்துவிடும்.