Skip to content
Showing posts with label HEALTH TIPS. Show all posts
Showing posts with label HEALTH TIPS. Show all posts

தினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!

 நன்றி குங்குமம் தோழ

நாம் தினமும் சாப்பிடும் உணவுதான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, சிறந்த தற்காப்பு.

பாதாம்:

இதில் வைட்டமின் - இ, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சிறந்த பலன் தரும்.

இஞ்சி:

வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்
படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும்போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.

கீரை:

அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

கேரட்:

கேரட்டை சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

பேரீச்சம்பழம்:

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து இதில் எக்கச்சக்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும். பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்குச் சிறந்த சக்தியைத் தரும்.

தொகுப்பு: எஸ்.மேரி ரஞ்சிதம்,சிவகங்கை.

இதய நோய் வராமல் தடுக்கும் வேர்க்கடலை:

இதய நோய் வராமல் தடுக்கும் வேர்க்கடலை
வேர்க்கடலை
* வேர்க்கடலைக்கு ஆயுட்காலத்தையே நீட்டிக்கும் ஆற்றல் உடையது.

* இதில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

* இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்ட சாம்பிராணி தூபத்தோடு இதையும் சேர்த்து போடுங்க:

 

கெட்ட சக்தி, பில்லி, சூனியம், மருந்து வைப்பது எதுவாக இருந்தாலும், அதை நம் வீட்டிலிருந்து விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த 4 பொருளுக்கு உண்டு. 48 நாள் சாம்பிராணி தூபத்தோடு சேர்த்து இதையும் போடுங்கள்.

உங்களுடைய பிரச்சினைக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாராவது உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மருந்து வைத்து விட்டார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா? ஏவல் பில்லி சூனிய பாதிப்பை நம்புபவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டுள்ள பதிவு இது.

நாட்டு மருந்து கடைக்கு சென்று, அந்த கடையில் தேவதாரு பொடி, பூலான் கிழங்கு பொடி, பெரும் கோரை கிழங்கு பொடி, கட்டி சாம்பிராணி இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய பொருட்களை உங்களுடைய வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகப் பெருமானின் முன்பு இந்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் உங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்று.

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவில் ஒன்று என்னன்னு தெரியுமா? முளைகட்டிய தானியங்கள் மற்றும் கீரை தோக்லா..

 எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்தி செய்யாத ஆரோக்கிய உணவுகளில் ஒன்று தோக்லா. பொதுவாகவே ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை. சத்துகள் நிறைந்தவை. குஜராத் மாநிலத்தின் உணவான தோக்லாவின் சுவையும் நன்மையும் மற்ற மாநிலத்தவரையும் கவர்ந்திழுக்க, இப்போது பரவலாக அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாறி வருகிறது.

உங்களுக்கு பிடித்த உணவின் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், முதலில் ஆரோக்கியமான தோக்லா செய்முறையை பற்றி காண்போம், இது உங்கள் நீரிழிவு உணவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதாக சேர்க்கலாம். தோக்லா என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு மிகச்சிறந்த சிற்றுண்டியாகும், சுஜி தோக்லா முதல் அரிசி தோக்லா வரை, எதிலும் நாம் தோக்லாவை உருவாக்க முடியும். முளை கட்டிய தானியங்கள் மற்றும் கீரை தோக்லா : முளை கட்டிய பாசிப்பயறு, ஃபைபர் மற்றும் புரதத்தை அதிகம் கொண்டிருப்பதால் இவை இரண்டும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கின்றன. மேலும் பல சிறப்புகளை இந்த தோக்லா கொண்டுள்ளதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது. கீரை மற்றும் பச்சை காய்கறிகள் மிகவும் சத்தானவை மற்றும் அதில் கலோரிகளும் குறைவாக உள்ளன. கீரைகளில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய கார்ப்ஸ் மிகக் குறைவு, எனவே அவை இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது. கீரைகளில் வைட்டமின் C உட்பட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் அவை பல ஆற்றலின் மூலமாக உள்ளது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.



தேவையான பொருட்கள்:1.5 கப் - கடலை மாவு
3 டேபிள் ஸ்பூன் - ரவை
1/2 டிஸ்பூன் - இஞ்சி விழுது
2 - பிச்சைமிளகாய்
1/4 டிஸ்பூன் - மஞ்சள் தூள்
சிறிதளவு - பெருங்காய தூள்
1/2 டிஸ்பூன் - உப்பு
1 டிஸ்பூன் - சர்க்கரை
1 டேபிள் ஸ்பூன் - எலுமிச்சை சாறு
1 டேபிள் ஸ்பூன் - எண்ணெய்
1/2 டிஸ்பூன் - பேக்கிங் சோடா
1.25 கப் - தண்ணீர் [மாவு பதத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்]

தாளிக்க தேவையானவை

2 டிஸ்பூன் - எண்ணெய்
1/2 டிஸ்பூன் - கடுகு
1/ டிஸ்பூன் - சீரகம்
1 டிஸ்பூன் - வெள்ளை எள்ளு
1 - பச்சை மிளகாய் இரண்டாக கீறியது
சிறிதளவு - பெருங்காய தூள்
1 கப் - துருவிய தேங்காய்
சிறிதளவு - கொத்தமல்லி இலை

செய்முறை:

முதலில் எடுத்து வைத்துள்ள கடலை மாவு ரவையை ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு இஞ்சி விழுது பச்சைமிளகாய் துண்டு பொடியாக நறுக்கிய பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்,எலுமிச்சைசாறு, உப்பு, பேக்கிங் சோடா, சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீருடன் சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். எந்த மாவை நிமிடம் ஊற விடவும்

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை சம அளவில் ஊற்றி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் அதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். பின்பு அதை சதுர வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பெருங்காயத்தூள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.தாளித்தவற்றை வெட்டி வைத்துள்ள டோக்லா துண்டுகள் மீது சேர்க்கவும். இறுதியாக துருவிய தேங்காயை அணைத்து துண்டுகளின் மீதும் சேர்த்து பரிமாறவும். சுவையான டோக்லா தயார்.


பாசிப்பருப்பு தோக்லா:-

தேவையானவை

தயிர் - கால் கப்,
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு - ஒரு கப்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஃப்ரூட் சால்ட் - 2 டீஸ்பூன்,
கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு

பாசிப்பருப்பு தோக்லா செய்முறை:-

முதலில் நறுக்கிய காய்கறிகளுடன் உப்பை சேர்த்து பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும்.

பிறகு அரைத்த மாவுடன் கடலை மாவு, தயிர், பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், உப்பு, கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்துகொள்ள வேண்டும் .

பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில், ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேல் கால் கப் தண்ணீர் விட, உடனே அது பொங்கி வரும். அதன் பின் மாவை நன்கு கலக்கவேண்டும்.

இட்லித்தட்டில், ஒரு சொட்டு எண்ணெய் விட்டுத் தடவி, அதில் மாவை விட்டு வேகவைத்து இறக்கி பரிமாறுங்கள்

ஃப்ரீடயபாட்டீஸ் வந்தாலே சர்க்கரை நோய் வருமா, அதை தடுக்க முடியுமா?

சர்க்கரை நோய் வந்தால் அதை முழுவதும் குணப்படுத்தவே முடியாது. வாழ்நாள் முழுக்க மாத்திரையும் உணவு கட்டுப்பாடும் மட்டுமே இதற்கு தீர்வு.


சர்க்கரை நோய் வந்த பிறகு தான் தொல்லை அதை வராமலே செய்துவிட்டால் என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் இது குறித்து விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு பரிசோதனையின் போது சர்க்கரை நோய் வருவதற்கான முந்தைய நிலையை காண்பிக்கும். இது ஃப்ரீ டையபட்டீஸ் என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு வழக்கத்துக்கு அதிகமாக உள்ளது என்பதால் விரைவில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு என்று சொல்லலாம்.
இன்சுலின் சுரப்பு குறைந்து வரும் இந்நிலையை சற்று கவனமாக கடந்தால் டைப் 2 நீரிழிவை வராமல் தடுத்துவிட முடியும்.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு இருந்தாலோ , ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை கொண்டிருந்தாலோ ஒழுங்கற்ற வாழ்க்கை முறையை கொண்டிருந்தாலோ அவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் 35 வயதுக்கு பிறகு ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அறிகுறிகளே இல்லையென்றாலும் ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்வது நல்லது. பரிசோதனையில் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு இருப்பவர்கள் உணவு முறைகளில் சிலவற்றை தவிர்த்தாலே நீரிழிவு அபாயத்தை குறைக்க முடியும்.

​ஃப்ரீடயாபட்டீஸ்

ஃப்ரீடயாபட்டீஸ் என்றால் நீரீழிவு நோய் என்று பயப்பட வேண்டாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வழக்கத்தை விட சற்று அதிகமாக கொண்டிருக்கும். ஆனால் டைப் 2 நீரிழிவு கிடையாது. ஆனால் இந்த நிலையை பலரும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இந்த நிலை வந்தவர்களுக்கு நீரிழிவு நொயால் பாதிக்கப்படும் உறுப்புகளில் இதயம், ரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் தொடங்கி இருக்கலாம். ஆனால் இதில் ஒரு நல்ல விஷயமும் உண்டு. ஃப்ரீடயபாட்டிஸ் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக நீரிழிவு 2 எதிர்கொள்ள கூடும் என்பது நிச்சயமில்லை.

இந்த நிலை வந்தவர்கள் ஆரோக்கியமான உணவு, உடல் உழைப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது ரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அப்படியான ஆரோக்கிய உணவுகள் போன்று தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

​அறிகுறிகள்

ஃப்ரீடயபட்டீஸ் பரிசோதனையின் போது மட்டுமே கண்டறிய கூடியதல்ல. இந்த நிலையிலும் அறிகுறிகள் உண்டு. பொதுவான அறிகுறிகள் இல்லை என்றாலும் சிலருக்கு சருமத்தில் கருமை நிறம் உண்டாக கூடும். கழுத்து, அக்குள், முழங்கைகள், முழங்கால்கள் போன்றவற்றிலும் கருமை படரும். இது ஃப்ரீடயாபட்டீஸை கண்டறியாமல் அலட்சியப்படுத்தும் போது அறிகுறிகள் அதிகரிக்கும்.

படிப்படியாக அவை அதிகரிக்கும் போது தாகம் அதிகரித்து அடிக்கடி சிறுநீர் வரும், பசி உணர்வு அதிகரிக்கும், உடல் சோர்வு உண்டாகும். பார்வையில் மங்கல் வரக்கூடும். சிலருக்கு எடை அதிகரிக்கும். சரும பிரச்சனை உண்டாகும். இவையெல்லாம் நீங்கள் ஃப்ரீடயபாட்டீஸிலும் முதிர்ந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.

​காரணங்கள்

ஃப்ரீடயபாட்டீஸ் காரணம் இதுதான் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் குடும்ப பிண்ணனி, மரபியல் காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.உடல் எடை கட்டுக்குள் இல்லாமல் அதிக எடையுடன் அடிவயிற்றில் அதிக கொழுப்புடன் இணைக்கப்பட்டு இருப்பதும் இதற்கான முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

உடல் செயல்பாடுகள் வழக்கத்தை காட்டிலும் குறைவாக இருந்தாலும் இந்த நிலை உருவாகலாம்.இந்த ஃப்ரீடயாபட்டீஸ் வந்தால் உடலில் தசைகள் மற்றூம் பிற திசுக்களை உருவாக்கும் உயிரணுக்களுக்கு ஆற்றலை கொடுக்கும் வேலையை செய்வதற்கு பதிலாக குளுக்கோஸ் ரத்தத்தில் சேர்கிறது. இந்த குளுக்கோஸ் உடலில் உண்ணும் உணவிலிருந்து வருகிறது. உணவு செரிமானம் ஆகும் போது உணவில் இருக்கும் குளுக்கோஸ் ஆனது ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை சேர்க்கிறது. உயிரணுக்களுக்கு குளுக்கோஸ் செல்ல இன்சுலின் தேவை.

உடலில் கணையத்தின் பின் அமைந்துள்ள சுரப்பியிலிருந்து இன்சுலின் சுரப்பு சுரக்கிறது. இது உணவு சாப்பிடும் போது ரத்தத்துக்கு இன்சுலின் சுரப்பை அனுப்புகிறது. இது குளுக்கோஸை உயிரணுக்களுக்கும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் பயன்படுகிறது. இந்த சுரப்பு குறையும் போது ரத்த்ததில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.

ஃப்ரீடயபாட்டீஸ் நிலை வரும்போது கணையம் போதுமான இன்சுலின் சுரக்காது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தவும் செய்யாது, இதனால் உயிரணுக்களுக்கு குளுக்கோஸ் செல்லாமல் அவை ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.

​சேர்க்க வேண்டிய உணவுகள்

ஃப்ரிடயாபட்டீஸ் வந்தாலே நீங்கள் ஆரோக்கியமான உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டும். பரிசோதனையில் ஃப்ரீடயபட்டீஸ் கண்டறிந்தால் உரிய இடைவேளையில் மீண்டும் பரிசோதனை செய்வது அவசியம். அதே நேரம் இது மீளக்கூடியதும் என்பதால் உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும்.

குறைந்த க்ளைசெமிக் உணவுகள்பட்டியலிட்டு எடுத்துகொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துகொள்ளும் போது குறைவான அளவு கொண்ட உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். பழுப்பு அரிசி முழு தானியங்கள் சேர்க்கலாம். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்.

கீரைகள், காய்கறிகள், மெலிந்த இறைச்சி, சோயாபீன், குறைந்த கொழுப்பு , பால், கொட்டைகள், விதைகள், தயிர், பருப்பு வகைகள், பச்சை பீன்ஸ், பாலாடைக்கட்டி, டோஃபு புரதச்சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கலாம்.

​தவிர்க்க வேண்டிய உணவுகள்

அதிக கிளைசெமிக் உணவுகள் வேகமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி சுத்திகரிக்கப்பட்ட மாவு, உருளைக்கிழங்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்க வேண்டும். இனிப்பு நிறைந்த உணவுகள் எடுத்துகொள்ளும் போது அவை ரத்த ஓட்டத்தில் வேகமாக கலப்பதால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக குளுக்கோஸ் கட்டுப்படுத்தமுடியாமல் அதிகரிக்க கூடும்.

செயற்கை பானங்கள் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உணவு பொருள்களும் தவிர்க்க வேண்டியதே. நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பை குறைவாக எடுத்துகொள்ள வேண்டும். இவை நீரிழிவு அபாயத்தோடு இதய பிரச்சனையையும் உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.

கவனம்
ஃப்ரீடயாபட்டீஸ் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை உண்டாக்கவில்லை என்றாலும் சிறுநீரகங்களை சேதப்படுத்த வாய்ப்புண்டு.
மேலும் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, இதய நோய், பக்கவாதம் சிறுநீரக நோய், நரம்பு சேதம், பார்வை குறைபாடு போன்ற குறைபாட்டையும் உண்டாக்கிவிடும்,.
ஆரோக்கியமான உணவு, உடல் உழைப்பு, உடல் எடை கட்டுப்பாடு என எல்லாமே ஃப்ரீடயாபட்டீஸை டைப் 2 நீரிழிவை தடுக்க கூடும்.
குறிப்பு
ஃப்ரீடயபாட்டீஸை கொண்டிருப்பவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் நீரிழிவு டைப் 2 வராமல் தடுக்கலாம்.

Flash News: பள்ளி மாணவர்களுக்கு - வெளியான புதிய அறிவிப்பு.!!

 

தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வு விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோனா குறைவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

பப்பாளியால் இதயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:

இதய ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, ஆரோக்கியமான உணவு மற்றும் அன்றாட உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அதோடு, இதயத் தமனிகளை நேர்த்தியாக, சுத்தமாகப் பராமரிக்க விரும்பினால், கொழுப்பின் அளவைக் குறைவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏற்கெனவே விவரித்துள்ள இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைத் தவிர, பப்பாளியில் தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் அதாவது எல்.டி.எல். அளவுகளைக் குறைக்கும் அம்சங்களும் உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், இது இதயத் தமனிகளில் கொழுப்பு வளரும்ம் (தமனித் தடிப்பு) வாய்ப்பைக் குறைக்கிறது. பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் 'சி'யும் இதயத்தைப் பாதுகாக்கிறது.

பலவகை நன்மைகளை தரும் ஏலக்காய்:

ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம். சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது. ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும். ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்

இதை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் தான் அதிகமாம்:

இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலானோர் புகையிலை, சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் அதிகளவு புற்று நோய் தாக்கு கிறது.

பெண்களை மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்தான் அதிகளவில் தாக்குகின்றன.
மரபை விட சுற்றுச்சூழல் தான் புற்றுநோயை அதிகளவில் தீர்மானிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் புற்றுநோயக்கும் தொடர்பு உண்டு.

காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிபொருட்கள் இருந்தால் அதை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. துரித உணவு, சமச்சீரற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சியின்மையாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.

பல முன்னணி பிரபலங்களும் கேன்சருடன் போராடி வென்றவர்கள் தான். கேன்சர் வந்தால் குணப்படுத்த முடியாது என துவண்டு விடுவது உடலை இன்னும் பலவீனப்படுத்தும். கேன்சர் வந்தாலும் மீண்டுவிடலாம் என்ற மன உறுதி வேண்டும். உடலில் எந்த இடத்தில் வலி இல்லாத கட்டிகள் வந்தாலும் அதை உடனே மருத்துவரிடம் அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.

நெல்லிக்காய், துளசி, அருகம்புல், வில்வம் புற்றுநோயை வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதியும் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியும் அனுசரிக்கப்படுகிறது.

உடல் நலம் : *ஒருவருக்கு "ஹைப்போ தைராய்டு" பிரச்சனை எதனால் ஏற்படுகிறது தெரியுமா.??

ஹைப்போ தைராய்டிசம் ஒரு ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் ஆகும். நம்முடைய நோயெதிப்பு அமைப்பு நம்முடைய ஆரோக்கியமான செல்களையே தாக்கும் போது ஆன்டி பாடிகளை உருவாக்குகிறது. இதனால் நம் நோயெதிப்பு மண்டலமே நமக்கு எதிராக செயல்படத் துவங்கி விடுகிறது. அதே மாதிரி தைராய்டு சுரப்பி தேவையான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாத போதும் இந்த பிரச்சினை உண்டாகிறது. இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் எதுவும் தெளிவாக தெரியாது.

ஆனால் கூடிய விரைவிலேயே ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக பாதிப்படைய செய்துவிடும். இந்த ஹைப்போ தைராய்டிசத்தால் இதய பிரச்சினைகள், நரம்பு காயங்கள், கருவுறாமை, மெதுவான வளர்சிதை மாற்றம், குமட்டல், மலச்சிக்கல், நாட்பட்ட சோர்வு, முடி உதிர்தல், குறைந்த பாலுணர்ச்சி, வறண்ட சருமம் மற்றும் விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகள் தெரிய வருகின்றன.

ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு குறைந்த அளவு மட்டுமே வைட்டமின் டி இருக்கும். இந்த சத்து தான் உடம்பில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால் வைட்டமின் டி இவர்களுக்கு குறைவாக இருப்பதால் குடல் கால்சியத்தை உறிஞ்சுவதில்லை. இதனால் இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவு குறைய ஆரம்பிக்கிறது. இதைச் சமன் செய்ய தைராய்டு சுரப்பி எலும்புகளில் சேகரிக்கப்பட்ட கால்சியத்தை உறிஞ்ச தூண்டுகிறது. இதனால் எலும்புகள் காலப்போக்கில் பலவீனம் அடைய ஆரம்பிக்கும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் மாற்றம் உண்டாகிறது. எனவே வைட்டமின் டி பற்றாக்குறையை போக்கினாலே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சரி செய்யலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எலும்புகளில் கால்சியம் குறைய குறைய எலும்புகள் மெல்லியதாகி உடைய ஆரம்பித்து விடும். எலும்புகளில் கால்சியம் இழப்புக்கும் வழிவகுத்துவிடும். எனவே ஹைப்போ தைராய்டிசம் கொண்ட நபர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து இரண்டையும் சரியாக கவனித்து வர வேண்டும்.

ஆயுர்வேத முறையில் இந்த ஹைப்போ தைராய்டிசத்திற்கு என்று சில மருத்துவ முறைகள் உள்ளன. யோகா போன்றவை இதற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி ஆயுர்வேத முறைப்படி ஹைப்போ தைராய்டிச நோயாளிகள் எந்த மாதிரியான முறைகளை பின்பற்றி பலன் அடையலாம் என்பதை வாங்க பார்க்கலாம்.

ஆசனங்கள்..

* உஜ்ஜய் பிராணயாமா (மனதை அமைதிப்படுத்தி உடலை வெப்பமாக்கும் யோக சுவாச நுட்ப நிலை )

* சர்வாங்காசனம் (தோள்பட்டை நிற்கும் பயிற்சி) இதுவும் ஹைப்போ தைராய்டிசத்திற்கான சிறந்த யோகா பயிற்சி என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

* நாடி சோதனா பிராணயாமம் (மாற்று நாசி மூச்சுப் பயிற்சி) இது உங்க மெட்டபாலிசத்தை சமன்செய்ய உதவுகிறது.

மேற்கண்ட யோகா பயிற்சிகள் ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று ஆயுர்வேத முறைகள் கூறுகின்றன.

தைராய்டு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

* தைராய்டு நோயாளிகள் அடிக்கடி அவர்களுடைய தைராய்டு அளவை பரிசோதிக்க வேண்டும்.

* தினமும் 4-5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் தைராய்டு ஹார்மோன் ஒழுங்காக வேலை செய்யும். மேலும் உங்க கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் தேங்கியுள்ள நச்சுக்களை இதன் மூலம் நீக்கி விடலாம்.

* ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கிய உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மை உள்ளவர்கள் வைட்டமின் பி அடங்கிய உணவுகளை எடுத்து வர வேண்டும். தினமும் வைட்டமின் டி அடங்கிய உணவுகளை எடுப்பது உங்க ஹைப்போ தைராய்டிச பிரச்சனைகளை குறைக்க உதவும்.

* ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

தைராய்டு நோயாளிகள் செய்யக் கூடாதவை:

* தைராய்டு நோயாளிகள் புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் போன்ற பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும். சிகரெட் புகைப்பதால் தைராய்டு சுரப்பியில் உள்ள அயோடைடு சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் மல்டினோடூலர் கோயிட்ரே சுருங்குவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

* மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளான கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் உணவுகள் வேண்டாம்.

* காபி மற்றும் சர்க்கரைக்கு நோ சொல்லுங்கள்.

* தைராய்டு பிரச்சினைக்கு நீங்களாகவே மருந்து எடுப்பதை தவிருங்கள். மருத்துவரை ஆலோசித்து பரிசோதனை மேற்கொண்ட பிறகே மருந்து எடுக்க வேண்டும்.

மேற்கண்ட டிப்ஸ்கள் தைராய்டு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

வேதனை தரும் கல்லீரலில் பாதிப்பு.., கல்லீரலை வலுவாக்கும் துளசியின் நன்மைகள்:

 

கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும்.*

ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.*

கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.*

இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.*

முற்றிய நிலையில் இரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிடும். எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.*

இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.

தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.