Skip to content
Showing posts with label STORY FOR STUDENTS. Show all posts
Showing posts with label STORY FOR STUDENTS. Show all posts

பால.ரமேஷ். தினம் ஒரு குட்டிக்கதை . ஒருமுறை, கென்ய ஓட்ட பந்தய வீரர் எபெல் முடய், எல்லை குறியை அடைய சில மீட்டர் தூரம் தான் இருந்தது.

பால.ரமேஷ்.
தினம் ஒரு குட்டிக்கதை .

ஒருமுறை, கென்ய ஓட்ட பந்தய வீரர் எபெல் முடய், எல்லை குறியை அடைய சில மீட்டர் தூரம் தான் இருந்தது.

ஆனால் குறியீடுகளை பார்த்து குழம்பி போய் இலக்கை அடைந்து விட்டதாக நினைத்து நின்று விட்டார்.

பின்னால் வந்த ஸ்பெயின் நாட்டின் ஐவன் பெர்னான்டஸ் இதை சுதாரித்து கொண்டு எபெலை தொடர்ந்து ஓட சொல்லி சத்தமிட்டார். எபெலுக்கு ஸ்பானிய மொழி தெரியாததால் இவர் சொன்னது புரியவில்லை.

இதை புரிந்து கொண்ட ஐவன் பெர்னான்டஸ், முடய்'யை இலக்குக்கு நேராய் உந்தி தள்ளினார்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் ஐவனிடம் கேட்டபோது,

"என்றாவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுகிற ஒரு சமுதாயமாக மாறுவோம் என்பது தான் என கனவு" என்றார்...

ஏன் அந்த கென்னியரை வெல்ல விட்டீர்கள் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, "நான் அவரை வெற்றிபெற விடவில்லை, அவரே வெற்றிக்கு அருகில் வந்து விட்டார். இந்த பந்தயம் அவருடையது" என்றார்....

நீங்கள் வென்றிருக்கலாம் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது,

அந்த வெற்றியின் சிறப்பு என்னவாக இருக்கும்?

இந்த பதக்கத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?

என் தாய் ..எனது குடும்பம் என்ன நினைப்பார்கள்?

நற்பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

நாம் நம் குழந்தைகளுக்கு எப்படி பட்ட பண்புகளை கற்று கொடுக்கிறோம்?
எந்த அளவுக்கு மற்றவர்களை நற்பண்புகளால் ஈர்க்கிறோம்? நம்மில் பலரும் மற்றவர்களின் பலவீனத்தில் உதவி செய்வதை விட அதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறோம்.

சுயநலமாய் இருப்பதை விட்டு,ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுவோம். நாம் எல்லாருமே வெற்றிக்கு தகுதி ஆனவர்கள்...

என்று கூறி முடித்தார்.

 நீதி: மனசாட்சியே இறைவனின் ஆட்சி.. மனசாட்சியை கொல்லும்போதே/கேட்காமல் சுயநலமாய் செயல்படும்போதே இறைவன் அங்கிருந்து நீங்கிவிடுகிறார். வெறுமனே தெய்வத்தை வணங்குவது மட்டும் பயனில்லை.

தர்மம் செய்வதற்கு தடையாக இருப்பது எது..? நிறைய பேர் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல.

தர்மம் செய்வதற்கு
தடையாக இருப்பது எது..?
நிறைய பேர் தர்மம் செய்யாமல்
இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல.

மனதில் துணிவு இல்லாததால்.

இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும்? என்ற பயம். எதிர் காலம் குறித்த பயம்.. மக்களை தர்மம் செய்ய விடாமல் தடுக்கிறது.

ஒருத்தனுக்கு கொடுத்தால் பத்து பேர் வருவான். எல்லாருக்கும் நம்மால் கொடுக்க முடியுமா என்ற பயம்.

எனவே தான் ஒளவையார்
'அறம் செய்ய விரும்பு' என்றார்..

you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்... அதாவது, "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...

“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழ பழகுங்கள்.