தற்போது வெளியான ஊதிய குறை தீர்ப்பு குழுவின் அரசாணைகள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 2010ல் வெளியிடப்பட்ட ராஜீவ் ரஞ்சன் தலைமையிலான ஒரு நபர் ஊதிய குழுவில் பல பிரிவினருக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.பின்னர் அது தவறு என மூன்று நபர் ஊதியக் குழுவில் ஊதிய பிடித்தம் செய்ய ஆணை வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்து பத்தாண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றம், மேல்முறையீடு கடைசியாக உச்சநீதிமன்றம் சென்றதன் பெயரில் ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் உயர்த்தி
வழங்கப்பட்ட ஊதியம் சரியா...? தவறா...?? என ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . அதனடிப்படையில் ஊதிய குறை தீர்ப்பு குழு அமைக்கப்பட்டு அதன் முடிவு தற்போது வெளியாகியுள்ளது . தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணைகளில் பார்வை 12 &13 இதுகுறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குறை தீர்ப்பு குழுவானது உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் ஒரு சிலருக்கு சரியென்றும் ஒரு சிலருக்கு மாற்றியும் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு முருகேசன் அவர்கள் தலைமையில் அமைந்த குழு அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பித்து அதனடிப்படையில் 20 க்கு மேற்பட்ட அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
(இது தமிழக அரசு ஏற்படுத்திய ஒரு நபர் ஊதியக்குழுவான சித்திக் அவர்கள் தலைமையில் அமைந்த கமிட்டி அல்ல...)
செய்தி பகிர்வு
மாநில தலைமை