தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள் தங்களது விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பெறும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 பதவிக்கான முதல்நிலை தேர்வு விடைத்தாள்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது விண்ணப்பதாரர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.