அதன்படி கடலூர் மாவட்டம் திட்டம் குடி வட்டம் பெண்ணாடம் அருள்மிகு ப்ரளயகாலேசுவரர் திருக்கோவில் கீழ்கண்ட
விபரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 06.08.2021 ம் தேதி மாலை 5.45க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை |
பணி | அர்ச்சகர் , உக்கிராணம், மெய்க்காவல் |
காலிப்பணியிடங்கள் | 03 |
வயது | விண்ணப்பத்தாரர்கள் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி ஆனவராகவும் 35 வயதிற்குக்குட்பட்டவராகவும் இந்து மதத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.08.2021 |
சம்பள விவரம் | ரூ.4,200 - 7700 |
கல்வி தகுதி | தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம பள்ளி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற வேத ஆகம பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு ஆகம பயிற்சி சான்று பெற்றிருத்தல் வேண்டும். |
நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்
- இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவத்தை ரூ.100 திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
- தெய்வீகத்தாலும், இராஜூகத்தாலும் ஏற்படும் மாற்றத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல
- இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வந்து தெரிந்து கொள்ளலாம்
நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கோவில்களின் வேலைவாய்ப்பு குறித்து நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.