Skip to content
Showing posts with label Railway Job. Show all posts
Showing posts with label Railway Job. Show all posts

சரக்கு ரயில் நிறுவனத்தில் 1074 காலியிடங்கள்.. கடைசி தேதி 21.7.21.. உடனே அப்ளை பண்ணுங்க.!!!


Freight Corridor Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 1074.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.7.2021.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

மேலும் இது குறித்த விவரங்களுக்கு https://dfccil.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேர்வு இல்லை, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : தென்னக ரயில்வே பயிற்சி வேலையில் விண்ணப்பிப்பது எப்படி?

தென்னக ரயில்வே துறையில் பணிபுரிந்து தொழில் பயில தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒரு பயிற்சி வேலை வாய்ப்பை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

என்ன மாதிரியான வேலை ?

கதிரியக்கவியல், நோயியல் மற்றும் இருதயவியல், எலக்ட்ரீஷியன், டி.எஸ்.எல் மெக்கானிக், ஏர் கண்டிஷனிங் மெக்கானிக், எம்.எம்.வி, எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், PASSA, எம்.எல்.டி கதிரியக்கவியல், எம்.எல்.டி நோயியல், எம்.எல்.டி இருதயவியல், தச்சு, வயர்மேன், டர்னர், ஃபிட்டர், வெல்டர், பெயிண்டர் ஆகிய மேற்கொண்ட பணிகளுக்கு பயிற்சி வேலைக்கு தென்னக ரயில்வேயில் ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை தகுதி ?

தகுதி தேர்வுகள் எதுவுமே கிடையாது. 10-வது பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைந்திருக்கு வேண்டும் அல்லது ஐடிஐ படித்தவர்கள் அதில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 15 - இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அதிகபட்ச வயது 22 முதல் 34 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பணியிடங்கள் உள்ளன ?

மொத்தம் 3378 பயிற்சி பணிக்கான காலி இடங்கள் இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மொத்த பயிற்சி பணிக்கான காலம், ஒரு வருடத்தில் இருந்து 2 வருடம் வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் சென்று பயிற்சி வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இணைய விண்ணப்பத்திற்கு ரூபாய் 100 கட்டணம் செலுத்தவேண்டும், SC/ST/மாற்று திறனாளிகள்/ மகளிர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டாம். மாதம் ரூபாய் 7000 உதவித்தொகையாக வழங்கப்படும், பயிற்சி முடிவடைந்தவுடன் நிச்சயம் ரயில்வே பணியில் வேலைக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது. ஆனால் இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு 20 சதவீதம் பணி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2021, நேரம் மாலை 5 மணி வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ரயில்வே துறையில் வேலை.. ஜூன் 14 கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!


மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முறை; நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 14.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.wr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

டிப்ளமோ தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரயில்வேயில் பணியாற்ற ஆசையா?


இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Senior Residents அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.39 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய இரயில்வே (Central Railway)

பணி : Senior Residents

காலிப் பணியிடங்கள் : 03

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, முதுநிலைப் பட்டம், DM/DNB போன்றவற்றில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 19.05.2021 தேதியன்று நடைபெறும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

மாதம் ரூ.75000/- ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!


தெற்கு ரயில்வே, சென்னை பிரிவில் காலியாக உள்ள முழுநேர மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் பாரா மருத்துவ பணியாளர் (நர்சிங் பணியாளர்கள்) களை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதிவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 13.05.2021 க்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

  • Contract Medical Practitioner -16 காலிப்பணியிடங்கள்
  • Nursing Staff - 16 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு:

01.05.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது, Medical Practitioner பதவிக்கு அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். Nursing Staff பதவிக்கு மேற்கண்ட தேதியின் படி, 20 முதல் 40 வயதுக்கு உட்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Practitioner கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து M.B.B.S முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Nursing Staff கல்வி தகுதி:

பி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது teleconferencing Online / Phone மூலம் நடைபெற உள்ளது.

மாத ஊதியம்:

  • Contract Medical Practitioner - ரூ.75000/-
  • Nursing Staff - ரூ.44900/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 13.05.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Official PDF Notification  -CLICK HERE

Apply Online – CLICK HERE

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு..

இந்தியன் ரயில்வே கட்டுமான ஆணையமான IRCON ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Works Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: IRCON

பணியின் பெயர்: Works Engineer

பணியிடங்கள்: 74

வயது வரம்பு : அதிகபட்சம் 30 வயது வரை

கல்வித்தகுதி : Civil Engineering மற்றும் Electrical Engg, Electronics Engg., Electrical & Electronics Engg., Electronics & Communication Engg., Electronics & Instrumentation Engg., Instrumentation & Control Engg., Computer Science தேர்ச்சி.

ஊதிய விவரம் : ரூ.36,000/-

தேர்வு செயல்முறை : எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் முறை

மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Official PDF Notification – https://www.ircon.org/images/file/HRM/2019/Advt_C_02_2021.pdf

Apply Online – http://career.ircon.in/erec/

கடைசி தேதி: 18.04.2021

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். ரயில்வேயில் அருமையான வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

< /p>

ரயில்வே துறையில் வெளியாகியுள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: டீசல் லோகோ நவீனமயமாக்கல்

பதவி: அப்ரண்டீஸ்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

காலி பணியிடங்கள்: 182

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 மார்ச் 2021

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு 100, எஸ்டி ,எஸ்சி களுக்கு கட்டணம் இல்லை.

சம்பளம்: அப்ரண்டிஸ் பலருக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முதல் ஆண்டில் நீங்கள் மாதத்திற்கு 7000 ரூபாய் சம்பளமும், இரண்டாம் ஆண்டில் 7700, மூன்றாம் ஆண்டில் 8050 ரூபாயும் சம்பளமாக பெறுவீர்கள்.

இந்த காலியிடங்களுக்கு http://dmw.indianrailways.gov.in.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

இண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..


மேற்கு மத்திய ரயில்வேயில் மொத்தம் 165 பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நியமனங்கள் ஃபிட்டர், வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்), எலக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர், செயலக உதவியாளர் (ஆங்கிலம்), பெயிண்டர் (பொது), தச்சு, பாலம்பர், டிராஃப்ட்மேன் (சிவில்), மெக்கானிக் டீசல், மெக்கானிக் டிராக்டர், ஆபரேட்டர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு trade apprentices பணிகளுக்கு ஆட்கள் செய்யப்படுகின்றனர்.


இந்த பணிகளுக்கு மார்ச் 1 முதல் மார்ச் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. இந்த பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வு எதுவும் இருக்காது. இந்த ஆட்சேர்ப்பு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு தகுதி உருவாக்கப்படும். இந்த தகுதியின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர் www.rrccr.com க்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 வது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : குறைந்தபட்சம் 15, அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில், ஓபிசி பிரிவுக்கு மூன்று ஆண்டுகள், எஸ்சி / எஸ்டி வேட்பாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

உதவித்தொகை: விதிகளின்படி வழங்கப்படும்.

தேர்வு முறை

வேட்பாளர்கள் தேர்வு 10 மதிப்பெண்கள் மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் செய்யப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் இருக்காது.

விண்ணப்ப கட்டணம் - ரூ .170

ஆர்வமுள்ள வேட்பாளர்கள் www.mponline.gov.in ஐப் பார்வையிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.