Skip to content

ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி*- REGARDING TAX STATEMENT :

ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி

இந்த நிதியாண்டில் (2017-18) பிப்ரவரி'2018 மாதத்தில் சம்பள பட்டியலுடன் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO),  இங்கு பணிபுரியும் அனைவருக்கும் வருமான வரி கணக்கிட்டு,  பிப்ரவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது எனச் சான்று  வழங்கினாலே போதும் எனவும், IT படிவங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை எனவும் விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலர் திரு.ஜே.மரிய ஜோசப் அவர்கள் வாய்மொழியாக நேற்று  (07-02-2018) எங்களிடம் [ நான் (S.செந்தில்குமார்),  S. மனோகர், ப.ஆ.(கணிதம்), அமேநிப, தியாகராஜபுரம், P.செல்வக்குமார்,ப.ஆ.(கணிதம் & பள்ளிப் பிரதிநிதி), அமேநிப, தியாகராஜபுரம், ஜாரட் ஜோஸ் ப.ஆ.(கணிதம் & முன்னாள் வட்டப் பொறுப்பாளர், தநா உமேபபஆகழகம்) , அஉநிப, தெற்கூர், மற்றும் திரு. R.இராஜா மணி மு.க.ஆ. (வேதியியல் & TNPGTA விருதுநகர் கல்வி மாவட்ட தலைமையிடத்துச் செயலர்) அமேநிப, தியாகராஜபுரம்] தெரிவித்தார்.

DEE - ஆசிரியர் வைப்புநிதிக்கணக்கு மாநில கணக்காயருக்கு 31.03.2014 இறுதி இருப்பு தணிக்கை முடித்து அனுப்பாமல் நிலுவையில் உள்ள அனைத்து கணக்குகளும் 28.02.2018 க்குள் முடித்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.



மதுரை மாவட்டம் கருவூல அலுவலர் செயல்முறைகள்- 80CCD 1(B) -ல் பென்சன் திட்டத்திற்கான ரூ 50000 கழிவு என்பது மத்திய அரசின் பென்சன் திட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்


Inspire award திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் படைப்புகள் :

Inspire award திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் படைப்புகள்.

புத்தாக்க அறிவியல் ஆய்வு 2017-2018 க்கான அறிவியல் கண்காட்சி  சிவகங்கை மாவட்ட அளவில் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (05.02.2018) நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் ஒன்றியத்தில் கலந்து கொண்ட பள்ளிகளின் படைப்புகள் உங்கள் பார்வைக்கு

கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தவிர மற்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பயன்படுத்தக்கூடாது - நீதி மன்ற உத்தரவுக்குக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு :