Skip to content

2017-18 ஆம் கல்வியாண்டு பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை 15.04.2018-க்கு பின் பணியிலிருந்து விடுவித்தல் -அறிவுரை வழங்குதல் சார்பு :


விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவராது : தேர்வுகள்துறை எச்சரிக்கை

 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளிகளுக்கு  கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் வராததால் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Teachers Transfer 2018 - இறுதி தேர்ந்தோர் பட்டியல், காலிப்பணியிடங்களுக்கு 1:2 என்ற விகுதத்தில் பட்டியல்தயாரிக்க உத்தரவு - பட்டியல் தயாரிக்க விதிமுறைகள் வெளியீடு - DEE இயக்குநர் செயல்முறைகள் :







இந்த 26 வார்த்தைகள் எவ்வளவு அழகு..

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்......!

படித்ததில் பிடித்தது*

அரசுப் பள்ளிக்கு உதவிய மறைந்த ஆசிரியர் குடும்பத்துக்குச் சமூக ஊடகம் மூலம் திரட்டப்பட்ட நிதி!



அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குப் புதிய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என முயற்சி எடுக்கும் அநேக ஆசிரியர்களின் நினைவில் வரும் முதல் பெயர் ஜெயா வெங்கட். அந்தளவுக்குப் பிறருக்கு உதவுவதில் முதல் நபராக நின்றவர். அவர் ஒரு தொழிலதிபரா... பெரும் வசதிபடைத்தவரோ அல்ல. காஞ்சிபுரம் மாவட்டம், உமையாள்பரணச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிவர்தான் ஜெயா வெங்கட்.

29 பள்ளிக் குழந்தைகள் பலி: இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளிப்பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது


இமாச்சலப்பிரதேச மாநிலம், நுர்பூர் அருகே பள்ளிப்பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பள்ளி மாணவர்கள் பலியானார்கள், பலர் காயமடைந்தனர்.

இமாச்சலப்பிரதேச மாநிலம், நுர்பூர் சட்டப்பேரவைக்கு உட்பட்டது கங்கரா மாவட்டமாகும். இங்குள்ள மக்வால் நகர் அருகே வாசிர் ராம் சிங் பதானியா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் பேருந்து இன்று மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளிப் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த 100 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டத்தை நண்பகலில் நடத்த அறிவுறுத்தல் :


பள்ளிகளில் காலை வேளையில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தை, நண்பகல் 11 முதல் 1 மணிக்குள்ளாக நடத்த பள்ளிகளை ஊக்குவிக்கும் முயற்சியை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது.
சூரிய ஒளி அதிகம் இருக்கும் இந்த நேரத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்துவதன் மூலமாக, மாணவர்கள் வைட்டமின் 'டி' ஊட்டச்சத்தை அதிகம் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது எந்த நிலுவையில் உள்ளனவோ அதே நிலுவையில் (status Que) இருத்தல் வேண்டும்என தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உத்தரவு!


List of 412 NEET training centers in all districts of Tamilnadu, set up by Govt.of Tamilnadu.

  • தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின் பட்டியல Click Here