Skip to content

NEET EXAM HALL TICKET PUBLISHED:

NEET' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு:
மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில்,நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.Download Admit  Card :http://cbseneet.nic.in/cbseneet/Online/AdmitCardAuth.aspx
எனவே, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த ஆண்டு, தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள், 'நீட்' தேர்வை ஏற்று கொண்டுள்ளன. தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. விண்ணப்ப எண்,பிறந்த தேதி மற்றும் ரகசிய குறியீடு மூலம், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு அறைக்கு வருவது குறித்த விபரங்களும், ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டு உள்ளது.