Skip to content

Rank list released for Veterinary courses-2017-18:

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: தருமபுரி பழங்குடியின மாணவி பி.சவுமியா 200/200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை
கால்நடை மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தருமபுரி பழங் குடியின மாணவி பி.சவுமியா 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு 21 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தரவரி சைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரி வித்தார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல் வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங் களில் கால்நடை மருத்துவக் கல்லூரி கள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால் நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 320 இடங்கள் இருக்கின்றன.
திரு வள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உண வுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கான 320 இடங்களில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இந்த 15 சதவீத இடங்கள் நீட் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகிறது.அதேபோல் உணவுத் தொழில் நுட்பப் படிப்பில் 20 இடங்களில் 15 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கடந்த மே மாதம் 15-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி ஜூன் 5-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தகுந்த சான் றிதழ்களுடன் சமர்ப்பிப்பது ஜூன் 12-ம் தேதி மாலை 5.45 மணி யுடன் முடிவடைந்தது. இந்நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.
பழங்குடியின மாணவி சாதனை
இதுதொடர்பாக பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைனில் 23,012 பேர் பதிவு செய்தனர். இவர்களில் 21,339 பேர் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் சமர்ப்பித்தனர்.

இதில் 20,827 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவற்றில் மாணவிகளின் விண்ணப்பங்கள் மட்டும் 11,127 (53.43 சதவீதம்). முதல் பட்டதாரி விண்ணப்பங்கள் 9,520 (45.71 சதவீதம்). இந்நிலையில், தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளோம்.கால்நடை மருத்துவப் படிப்புக் கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 மாணவிகளும், 4 மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களை 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து மாணவிகள் பிடித்துள்ளனர். அதிலும் பழங் குடியினர் பிரிவைச் சேர்ந்த தருமபுரி மாணவி பி.சவுமியா 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

 ஜூலை 19, 20, 21 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.இவ்வாறு டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.பேட்டியின் போது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எஸ்.பாலகிருஷ்ணன், வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிமுதல்வர் டாக்டர் சி.பாலச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.