Skip to content

TODAY RASI PALAN 30.06.2017:

தின பலன்-30.06.2017
மேஷம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மிதுனம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். கடனாக கொடுத்த பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கடகம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சிம்மம்
காலை 7 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கன்னி
காலை 7 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
துலாம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தனுசு
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மகரம்
காலை 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கும்பம்
காலை 7 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மீனம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே