Skip to content

EMIS NEW ENTRY -HOW TO UPDATE ??

EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ்வாறு?

EMIS - முதல் வகுப்பு  மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய
முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்‌ஷன் உருவாக்க வேண்டும்

செக்‌ஷன் எவ்வாறு  உருவாக்குவது
SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,
1. Go to School Profile
2. Class-Wise no of Sections .
3. Add class And Section Details
4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.
புதிய மாணவர் சேர்க்கை எவ்வாறு செய்வது
1.go to student
2. create new child list
பிறகு படிவத்தில் கேட்கும் விவரங்களை உள்ளீடு இடவும்.
தேவைப்படும் முக்கிய விவரங்கள்
1.மாணவரின் தொலைபேசி எண்
2.மாணவன் சேர்ந்த தேதி
3.மாணவரின் முழு முகவரி (முதல் முறையே சரியாக பதிவு செய்ய வேண்டும் பின்னர் மாற்ற  முடியாது)
4.இயலாக்குழந்தைகள் எனில் அதன் விவரம்(முதல் முறை  பதியும் போதே தர வேண்டும் இல்லையேல் பின்னர் சேர்க்க இயலாது)
5.மாணவனின் தமிழ் பெயர் பதிவு செய்தாலும் பின்னர் சரியாக காண்பிக்கவில்லை-எனவே அதனை பதிவு செய்வதை தவிக்கலாம்
6. மாணவனின் புகைப்படம் தற்போது தேவையில்லை
7.மாணவனின் தந்தை,தாய்,அல்லதுபாதுகாவலர் ஆகியோரில் குறைந்தது இரு நபர்களின் விவரங்கள் தரப்பட வேண்டும்
8. மாணவனின் செல்போன் எண்(தாய் அல்லது தந்தை அலைபேசி எண்)
9. மாணவன் பயிலும்வகுப்பு,சேர்க்கை எண், செக்‌ஷன், மீடியம்(பயிற்று மொழி) முன்னர் படித்தவகுப்பு ஆகியன தரப்படல் வேண்டும்