Skip to content

How to Teach the Lesson introduced the guide for Teachers-Tamilnadu Government:

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல், பாடங்கள் நடத்தும்போது, இந்த கையேட்டின் அடிப்படையில், ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி, ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். வரலாறு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும்.
இது குறித்து மாநில பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அடுத்த கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இந்தபுதிய பாடத்திட்டத்தின் படி இனி எப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த கையேடு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். புதிய பாடத் திட்டங்களுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது, புரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவது, பயிற்சிகளை எவ்வாறு அளிப்பது உள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள், அறிவுரைகள் இந்த கையேட்டில் இருக்கும்” எனத்த ெதரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு வகுப்பு வாரியாகவும், பாடங்கள் வாரியாகவும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் கையேடு தரப்படும். இதன் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுகிறது. இந்த கையேடு மாநிலவழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும்.
பாடங்களை திட்டமிடல், வரைபடத்துடன் விளக்குதல், வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்யும் விதத்தில் கையேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும். உதாரணமாக, இயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்திவிட்டு செல்லாமல், அதை தொழில்நுட்பரீதியாக புராஜெக்டர் மூலம் நடத்தும் போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும். அவ்வாறு செய்வது எப்படி என்று கையேட்டில் தரப்பட்டு இருக்கும்.
2018, ஜனவரி மாதம் புதிய பாடத்திட்டங்களின் டிஜிட்டல் வரைவு தொகுப்பு தயாராகிவிடும். அதன்பின், அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பாடத்திட்டங்களின் படி எப்படி பாடம் நடத்துவது, தங்களை எப்படி தயார் செய்து கொள்வதுகுறித்த ஒரு வார கால வகுப்புகள் நடத்தப்படும். அப்போது இந்த கையேடுகள்தரப்படும். இந்த கையோடுகள் கல்வித்துறையில் வல்லுனத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்டது என்பதால், ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும், பல்வேறு நவீன, புத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும்.