Skip to content

புதிய சிந்தனை அல்ல இது...புத்துணர்சியூட்டும் சிந்தனை.

*1.பத்து நிமிடங்கள் முன்னதாக:*
காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?*
*5.50க்கு எழுந்து பழகுங்கள்.*
கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.


*3.முப்பது நிமிடங்கள்:*

ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். *உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா* என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக *முப்பது நிமிடங்கள்* புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.

*4.உணவில் ஒழுங்கு:*

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். *முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.*

*5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:*

```Day Task.``` உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். *நினைத்த அனைத்தும் நடப்பதை* விரைவில் உணர்வீர்கள்.

*6.அடைசல்கள் அகற்றுங்கள்:*

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது *அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.*

*7.மனிதர்களை நெருங்குங்கள்:*

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை *நேசிக்கத் தொடங்குங்கள்.* எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

*8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:*

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் *அடுத்தது என்ன* என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். ```(WHAT NEXT?)``` இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

*9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:*

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே *நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.*

*11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:*

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை *புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.* அது தானாகவே பெருகும்.

*12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:*

உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று *அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.*

*13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:*

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். *நகைச்சுவை உணர்வு,* வாழ்வின் பூட்டப்பட்ட *பல கதவுகளைத் திறந்துவிடும்.*

*14.மனிதத்தன்மையே கடவுள்தன்மையின் ஆரம்பம்:*

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் –
மகிழ்ச்சியாய் –
*வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில்* தீவிரமாகப் பங்கெடுங்கள்.