Skip to content

பப்பாளியால் இதயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:

இதய ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, ஆரோக்கியமான உணவு மற்றும் அன்றாட உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அதோடு, இதயத் தமனிகளை நேர்த்தியாக, சுத்தமாகப் பராமரிக்க விரும்பினால், கொழுப்பின் அளவைக் குறைவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏற்கெனவே விவரித்துள்ள இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைத் தவிர, பப்பாளியில் தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் அதாவது எல்.டி.எல். அளவுகளைக் குறைக்கும் அம்சங்களும் உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், இது இதயத் தமனிகளில் கொழுப்பு வளரும்ம் (தமனித் தடிப்பு) வாய்ப்பைக் குறைக்கிறது. பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் 'சி'யும் இதயத்தைப் பாதுகாக்கிறது.