Skip to content

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவில் ஒன்று என்னன்னு தெரியுமா? முளைகட்டிய தானியங்கள் மற்றும் கீரை தோக்லா..

 எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்தி செய்யாத ஆரோக்கிய உணவுகளில் ஒன்று தோக்லா. பொதுவாகவே ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை. சத்துகள் நிறைந்தவை. குஜராத் மாநிலத்தின் உணவான தோக்லாவின் சுவையும் நன்மையும் மற்ற மாநிலத்தவரையும் கவர்ந்திழுக்க, இப்போது பரவலாக அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாறி வருகிறது.

உங்களுக்கு பிடித்த உணவின் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், முதலில் ஆரோக்கியமான தோக்லா செய்முறையை பற்றி காண்போம், இது உங்கள் நீரிழிவு உணவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதாக சேர்க்கலாம். தோக்லா என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு மிகச்சிறந்த சிற்றுண்டியாகும், சுஜி தோக்லா முதல் அரிசி தோக்லா வரை, எதிலும் நாம் தோக்லாவை உருவாக்க முடியும். முளை கட்டிய தானியங்கள் மற்றும் கீரை தோக்லா : முளை கட்டிய பாசிப்பயறு, ஃபைபர் மற்றும் புரதத்தை அதிகம் கொண்டிருப்பதால் இவை இரண்டும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கின்றன. மேலும் பல சிறப்புகளை இந்த தோக்லா கொண்டுள்ளதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது. கீரை மற்றும் பச்சை காய்கறிகள் மிகவும் சத்தானவை மற்றும் அதில் கலோரிகளும் குறைவாக உள்ளன. கீரைகளில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய கார்ப்ஸ் மிகக் குறைவு, எனவே அவை இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது. கீரைகளில் வைட்டமின் C உட்பட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் அவை பல ஆற்றலின் மூலமாக உள்ளது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.



தேவையான பொருட்கள்:1.5 கப் - கடலை மாவு
3 டேபிள் ஸ்பூன் - ரவை
1/2 டிஸ்பூன் - இஞ்சி விழுது
2 - பிச்சைமிளகாய்
1/4 டிஸ்பூன் - மஞ்சள் தூள்
சிறிதளவு - பெருங்காய தூள்
1/2 டிஸ்பூன் - உப்பு
1 டிஸ்பூன் - சர்க்கரை
1 டேபிள் ஸ்பூன் - எலுமிச்சை சாறு
1 டேபிள் ஸ்பூன் - எண்ணெய்
1/2 டிஸ்பூன் - பேக்கிங் சோடா
1.25 கப் - தண்ணீர் [மாவு பதத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்]

தாளிக்க தேவையானவை

2 டிஸ்பூன் - எண்ணெய்
1/2 டிஸ்பூன் - கடுகு
1/ டிஸ்பூன் - சீரகம்
1 டிஸ்பூன் - வெள்ளை எள்ளு
1 - பச்சை மிளகாய் இரண்டாக கீறியது
சிறிதளவு - பெருங்காய தூள்
1 கப் - துருவிய தேங்காய்
சிறிதளவு - கொத்தமல்லி இலை

செய்முறை:

முதலில் எடுத்து வைத்துள்ள கடலை மாவு ரவையை ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு இஞ்சி விழுது பச்சைமிளகாய் துண்டு பொடியாக நறுக்கிய பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்,எலுமிச்சைசாறு, உப்பு, பேக்கிங் சோடா, சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீருடன் சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். எந்த மாவை நிமிடம் ஊற விடவும்

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை சம அளவில் ஊற்றி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் அதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். பின்பு அதை சதுர வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பெருங்காயத்தூள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.தாளித்தவற்றை வெட்டி வைத்துள்ள டோக்லா துண்டுகள் மீது சேர்க்கவும். இறுதியாக துருவிய தேங்காயை அணைத்து துண்டுகளின் மீதும் சேர்த்து பரிமாறவும். சுவையான டோக்லா தயார்.


பாசிப்பருப்பு தோக்லா:-

தேவையானவை

தயிர் - கால் கப்,
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு - ஒரு கப்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஃப்ரூட் சால்ட் - 2 டீஸ்பூன்,
கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு

பாசிப்பருப்பு தோக்லா செய்முறை:-

முதலில் நறுக்கிய காய்கறிகளுடன் உப்பை சேர்த்து பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும்.

பிறகு அரைத்த மாவுடன் கடலை மாவு, தயிர், பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், உப்பு, கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்துகொள்ள வேண்டும் .

பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில், ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேல் கால் கப் தண்ணீர் விட, உடனே அது பொங்கி வரும். அதன் பின் மாவை நன்கு கலக்கவேண்டும்.

இட்லித்தட்டில், ஒரு சொட்டு எண்ணெய் விட்டுத் தடவி, அதில் மாவை விட்டு வேகவைத்து இறக்கி பரிமாறுங்கள்