Skip to content

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணிக்கு ஆள்சேர்ப்பு -கடைசி நாள் 23.12.2020

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இரண்டு பயிற்றுநர்கள் (கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட்) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் பொருட்டு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் தங்களது விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டி அனைத்து சான்றிதழ்களின் நகலினை தன்கையொப்பம் இட்டு இணைத்து முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை 622002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நிரப்பப்படும் பணியிடம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட் பொதுமுன்னுரிமை காலியிடம் 1ம், தாழ்தப்பட்டோர் (அருந்ததியினர்) முன்னுரிமை (பெண்கள், ஆதரவற்றவிதவை) காலியிடம் 1ம் தொகுப்பூதியம் ரூ.20,000 மும் வழங்கப்படும். கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்கல்வி மூன்று வருடம் பட்டயம் படிப்பு, அங்கீகரிக்கப்பட்ட வாரியம், கணினி அறிவியல் நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் இத்துடன் தொடர்புடைய துறையில் இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற்சான்று மற்றும் தேசிய கைவினைஞர் பயிற்றுநர் சான்றிதழுடன் தொடர்புடைய துறையில் மூன்று வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது 1.7.2020 அன்றைய நிலவரப்படி 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்சம் ஓ.சி-30, பி.சி, எம்.பி.சி, டி.எண்.சி -32, எஸ்.சி, எஸ்.டி -35 வயதிற்குள் இருக்க வேண்டும். 12ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியுடைய பி.சி, எம்.பி.சி, டி.எண்.சி எஸ்.சி, எஸ்.சி.எ, எஸ்.டி க்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

ஆதரவற்ற விதவை என்பதற்கு வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விவரங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் உடன் இணைத்து அனுப்பவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 23.12.2020 மாலை 5.45 மணிக்குள் ஆகும்.

குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. தகுதியான நபர்கள் தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ, நியமன அலுவலருக்கு முழு அதிகாரம் உள்ளது.