Skip to content

+2 , டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை :


சென்னை: அணுசக்தித் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய அறிவிப்பானது ஸ்டெனோகிராபர், உயர் பிரிவு கிளார்க், ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டன்ட் அல்லது ஜூனியர் ஸ்டோர்கீப்பர் போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த பணிக்கு மொத்தம் 74 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 27-ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு அப்ஜெக்டிங் ஸ்டெனோகிராபி திறன், விரிவான தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்க

ள்ஸ்டெனோ பணிக்கு 6 இடங்களும் உயர்நிலை பிரிவு கிளார்க் பணிக்கு 5 இடங்களும் ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டென்ட் அல்லது ஜூனியர் ஸ்டோர்கீப்பர் பணிக்கு 63 இடங்களும் என மொத்தம் 74 இடங்கள் உள்ளன.

ஸ்டெனோகிராபர் கிரேடு 1 பணிக்கு 35,400 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும். ஸ்டெனோ கிரேடு 3 பணி உள்பட இதர பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ 25,500 வழங்கப்படும். ஸ்டெனோ பணிக்கு மெட்ரிகுலேஷன் படித்துவிட்டு ஆங்கிலம் டைப்பிங் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்

.உயர்நிலை பிரிவில் கிளார்க் பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டென்ட் அல்லது ஜூனியர் ஸ்டோர் கீப்பர் பணிக்கு அறிவியல் அல்லது காமர்ஸ் பிரிவில் பட்டம் அல்லது மெக்கானிக்கல் என்ஜினியரிங் அல்லது எல்க்ட்ரானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, இஎக்ஸ்எஸ்எம், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மேலும் விவரங்களுக்கு https://www.dpsdae.gov.in/