இந்திய விண்வெளித் துறையின் கீழ் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முயற்சியோடு சதீஷ் தவான் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.
விண்வெளி கதிர்வீச்சு, காந்த மண்டலம் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். இந்த செயற்கைக்கோளானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் நமது பெயர்களை எழுதி விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய செயற்கைக்கோளில் இதுபோலப் பெயர்களைப் பதிவு செய்து அனுப்பியது. அதில் லட்சக்கணக்கானோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்தனர்.
தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக அனுப்பப்படுகின்ற இந்த செயற்கைக்கோளில் உங்களது பெயர்களைப் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://www.spacekidzindia.in/sdsat-pass/ என்ற இணைப்புக்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்யலாம்.
பெயர்களைப் பதிவு செய்யக் கடைசித் தேதி ஜனவரி 3, 2021.
பெயர்களைப் பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.