Skip to content

தேங்காய் உரிக்கும்போது அதற்கு ஏன் குடுமி வைக்கிறார்கள் தெரியுமா?


பெண்ணாக இருந்தாலும், தேங்காயாக இருந்தாலும் குடுமி இருந்தாலே தனி அழகு தான். எந்த கடையிலாவது குடுமி நீக்கப்பட்ட தேங்காய் விற்பனையாகி பார்த்து இருக்கீங்களா? நிச்சயம் அப்படி மட்டும் விற்கவே மாட்டாங்க. குடுமிக்கு பின்னால் பெரிய வரலாறே இருக்குங்க. நம்முடைய தலையை மண் டை ஓடு பாதுகாப்பது போல, தேங்காய் உள்ளே இருக்கும் ஊண், தண்ணீரை பாதுகாப்பது குடுமி. தேங்காய் கெட் டுப்போகாமல் நீண்ட நாள் பாதுகாக்க வேண்டுமென்றால், குடுமி நீக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அதில் வெறும் நார் மட்டுமே இருப்பதில்லை. குடுமியை நீக்கிவிட்டுப்பார்த்தால், மூன்று கண் போன்ற துளைகள் இருக்கும். அதில் துளை உண்டானால் தேங்காய் சீக்கிரம் கெட் டுப்போகும். இதைத்தாண்டி இன்னொரு காரணமும் உண்டு. தேங்காய் தென்னை மரத்தின் உயரத்தில் இருந்து கீழே விழும் போது, சித றாமல் இருக்கவும், அதிர்வை தாங்கவும் நார் போன்ற அமைப்பு உதவுகிறது. அதுவும் தரையில் மோ தும் அடிப்பகுதியில் நார் அதிகமாகவும், கணு இணையும் இடத்தில் நார் குறைவாகவும் இருக்கும்.

தேங்காய் முளைப்பு விடும் இடத்தில் நார் மிகுந்து இருந்தும், அது மண்ணில் ஊன்றி வளரும் பகுதி நார் குறைந்து இருக்கும். எல்லாமே இயற்கை படைப்பின் விசித்திரம். இயற்கை படைப்பின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு அதிசயம் இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. கிராமப்புறத்தில் மட்டை உரிக்கும் போது, தவறுதலாக குடுமியுடன் சேர்த்து உரித்துவிட்டால், பெரியவர்கள் சண் டைக்கு வந்துவிடுவார்கள். தேங்காயை குடுமி இல்லாமல் பார்ப்பது, கெ ட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் ஒரு சில பதார்த்தங்கள் செய்யும் போது, முழு தேங்காயின் மீது குடுமி உரிக்கப்பட்டு, அதனுள் வெல்லம், நெய் கலந்து தீயில் வாட்டி எடுக்கப்படும். பூஜைக்கு வைக்கும் தேங்காய் மட்டும் குடுமி இல்லாமல் இருக்கக்கூடாது. இந்து மத வழக்கப்படி, தேங்காய் கண் தெரியும் படி கடவுளுக்கு படைக்கக்கூடாது என்பது நம்பிக்கை. ஒரு குடுமிக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருப்பத்தை அறிந்துகொண்ட கையோடு தேங்காய் உடைக்கப் போகிறேன், இன்று இரவு சட்னிக்காக! நமக்கு சோறு முக்கியம்ல.