Skip to content

WOW : சாப்பிட்டு படம் பார்க்கும் வேலை.. ரூ35,000 சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

போனஸ் ஃபைண்டர் என்ற நிறுவனம் பீட்சா சாப்பிட்டுக்கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்கும் புதிய வேலை ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு மாத சம்பளம் ரூபாய் 35 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர்பவர்கள் தினமும் நெட்ப்ளிக்ஸ் இல் வெளியாகும் தொடர் மற்றும் படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுத வேண்டும்.

மேலும் அவர்கள் படம் பார்க்கும்போது சாப்பிடும் பீட்சாவின் சுவை அதில் சேர்க்கப்பட்ட கலவை பொருட்கள் உள்ளிட்டவற்றை பற்றியும் எழுத வேண்டும். இந்த பணிக்கான தேர்வு வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது என கூறப்படுகிறது