Skip to content

12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள செவிலியர், எக்ஸ்ரே டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.24 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

பணி : X-Ray Technician, Pharmacist, Nurse, Dental Hygienist & Dental Technician, CSSD Technician, Pathology Technician உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

X-Ray Technician - 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pharmacist - 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்மசி துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Nurse - நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் கணினி உபயோகிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Dental Hygienist & Dental Technician - 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படித்தவர்கள், அடிப்படை கணினி அறிவு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CSSD Technician - 12ம் வகுப்பில் அறிவியல் துறையில் தேர்ச்சி பெற்று Central Sterile Supply Department பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Pathology Technician - பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.11,730 முதல் ரூ.24,234 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் RMRC (Radiation Medicine Research Centre), Kolkata and BARC, Mumbai எனும் முகவரியில் 05.03.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.barc.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.