Skip to content

கடலூர் மாவட்டத்தில் மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு நேர்காணல் :

கடலூர் மாவட்டத்தில் 66 மினி கிளினிக் உதவியாளர் பணியிடங்களுக்கு 619 பேரிடம் நேற்று நேர்காணல் நடந்தது.

கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவர், செவிலியர், உதவியாளர் பணிகளை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையே தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள உத்தர விட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 66 மினி கிளினிக் குகளுக்கு தலா 66 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய் யப்பட்டனர்.

இந்நிலையில் உதவி யாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் நேற்று கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. இதற்கு 8-ம் வகுப்புத் தேர்ச்சி கல்வித் தகுதியாகும். நேர்காணலில் பங்கேற்றிருந்த பெண்களிடம் விசாரித்த போது பெரும்பாலானோர் முதுகலை படித்துவிட்டு இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது. மேலும் தற்போது வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை. எனவே அரசு வழங்கும் மாதம் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்துடன் கிடைக்கும் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 565 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இது தவிர சிலர்நேரிடையாகவும் இன்று (நேற்று)வந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து 619 பேர் விண்ணப்பித் துள்ளனர் என்று தெரிவித்தார்.