Skip to content

புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 90 சீனியர் ரெசிடென்ட் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 90 சீனியர் ரெசிடென்ட் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் (BHUBANESWAR AIIMS) 90 சீனியர் ரெசிடென்ட் (senior resident) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. அதற்காக, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த பணியாகும். தகுதியான நபர்கள் மே 18 ஆம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி

இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழங்களில் முதுநிலை பட்டப்படிப்பான MD/MS/MDS/DM/M.Ch/DNB ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் வயது

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நாளில் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடுகளின்படி, பல்வேறு பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுகளும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

1. காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் மே 18ம் தேதி முதல் தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளத்துக்கு சென்று recruitment பக்கத்தை தேர்தெடுங்கள்.

2. பின்னர், அங்கிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகள் மற்றும் விதிமுறைகளை தெளிவாக படித்துக்கொள்ளுங்கள்

3. நீங்கள் தகுதியான நபர் என்றால் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கேட்கப்பட்டுள்ள சான்றுகளை தவறாமல் இணைக்க வேண்டும்.

: வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

4. கடைசியாக காலிப்பணியிடத்துக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பிக்கலாம். அதற்கு, முன்னர் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையா? சரியான தகவல்களை கொடுத்துள்ளீர்களா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை மீண்டும் பார்த்துக்கொள்ளுங்கள்

விண்ணப்பக் கட்டணம்

பொதுப்பிரிவினர் (OC) மற்றும் ஓ.பி.சி (OBC)பிரிவினருக்கு ரூ.1500, SC/ST/EWS பிரிவினருக்கு ரூ.1200, PWBD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்தெடுக்கும் முறை

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். காலிப்பணியிடத்தைவிட 3 மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்தால் மட்டுமே எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.

ஊதிய விபரம்

தேர்தெடுக்கும் நபர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ரூ.67,700 ஊதியம் மற்றும் கூடுதல் சலுகைகள், வழக்கமான படித்தொகை கிடைக்கும்

பணி வரம்பு

புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், தற்போது தேர்தெடுக்கும் நபர்கள் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியில் இருக்க முடியும் என கூறியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்