Skip to content

பட்டியலின மாணவர்களுக்கு ரூ.13,500 வரை ஆண்டுதோறும் ஊக்கத்தொகை - கடைசி நாள்!!


2021-2022 ம் ஆண்டிற்கான பட்டியலின மாணவர்களுக்கு உதவிதொகை பெற ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு உதவி தொகை :

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. முக்கியமாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் கல்லூரிகளில் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி செலவை அரசே ஏற்கிறது. மேலும் மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க நல திட்டங்களையும் வழங்கி வருகிறது. பள்ளி மட்டும் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைகளை அளிக்கிறது.

இந்த உதவி தொகைகள் மாணவர்களின் கல்விக்கு பெரும் உதவியாக அமைகிறது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பட்டியல்கள் சேகரிக்கப்பட்டு ,அவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு தகுதியுடையவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.2500 முதல் ரூ.13,500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருடம் தோறும் இந்த திட்டத்தால் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் பயனடைகின்றனர்.

இந்நிலையில் 2021-2022 ம் ஆண்டுக்கான பட்டியலின மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்குமாறு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டியலின மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இது வரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் மேலும் தகவல்களுக்கு socialjustice.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.