Skip to content

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக மாறிய மாவட்டம்.!

 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் இருந்தனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 1,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,59,916 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,384 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,32,656 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 17 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,495 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று மேலும் 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,09,167 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.