இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு விசாரணை விபரம் :
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு (WP-28558/2017) விசாரணைக்கு (8.11.2017) இன்று வந்தது.
விசாரணையின் போது, நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர் ஊதிய அநீதி குறித்து விரிவாக விளக்கினார்.
நீதியரசர் நான்கு வாரத்திற்குள் அரசு பதில் மனு அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.
பின்னரும் நமது வழக்கறிஞர் வாதத்தைத் தொடர்ந்தார்.
மீண்டும் மூன்று வாரத்திற்குள்ளாக அரசு பதில் அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.
நமது தரப்பில் மறுப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி 2016ல் அரசு வழங்கிய எழுத்துப்பூர்வ உத்தரவாத கடிதத்தை சுட்டிக்காட்டினார்.
நீதியரசரிடம் நமக்கு ஏற்பட்டுள்ள அநீதியை புரிந்து கொண்டார்.....
நீதியரசர் அரசு தரப்பைப் பார்த்து, "ஒரே பதவிக்கு" 1.6.2009 முன்பு ஒரு ஊதியம் பின்பு ஒரு ஊதியம் என எப்படி இருவேறு ஊதியம் வழங்கப்படுகிறது எனக் கேட்டார்.*
அரசு தரப்பில் பதில் ஏதுமில்லை.
நமது தரப்பில் அரசாணை எண்--303 படி மூன்று மாத காலத்தில் விருப்பம் தெரிவிக்கலாம் என தெரிவித்துவிட்டு...
பின்னர் அரசு நிதித்துறை கடிதம் மூலமாக 20 ம் தேதிக்குள் விருப்பம் அளிக்க கட்டாயப்படுத்துகிறது எனக் கூறப்பட்டது.
நீதியரசர் உடனடியாக அரசு தரப்பில் நாளை மறுதினமே பதில் மனு தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டார்.*
நாளை மறுதினம் (10.11.2017) மீண்டும் விசாரணை தொடரும்.....
இடைநிலை ஆசிரியர்களுக்கு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....
தகவல்
ஜே.ராபர்ட்
2009&TET போராட்ட ஒருங்கிணைப்புக்குழு
மாநில அமைப்பு
DEE PROCEEDINGS- RIESI Bangalore- 14.11.2017 முதல் 13.12.2017 வரை ஆங்கிலப்பயிற்சி - கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் விவரம் கோருதல் சார்பு
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு - முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் தெரிவு செய்யப்படுவதில்லை - TRB விளக்கம்
SSA- கற்றல் விளைவுகள் பயிற்சி - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் இம்மாதத்தில்(நவம்பர் 2017) நடைபெறுதல் சார்பு SPD Proceeding ...
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்படும் தகவல்களை தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும் - RTI LETTER
Today Rasipalan 05.11.2017:
தின பலன்05.11.2017
மேஷம்
காலை
8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து போகும்.
பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமைக்
கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள்
நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை
விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
ரிஷபம்
காலை
8.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின்
விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வீட்டிலும்,
வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி
சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும்.
உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மிதுனம்
எடுத்த
வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன்
கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். சிக்கனமாக
இருங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியை
பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கடகம்
எதையும்
தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர்
பணவரவு உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை
வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
சிம்மம்
உங்கள்
போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி
வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை
ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
கன்னி
காலை
8.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.
பிற்பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும்.
குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் வரும்.
உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
துலாம்
காலை
8.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.
குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.
கோபத்தால் இழப்புகள் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் மறைமுக
அவமானங்கள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
விருச்சிகம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.
வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள்
மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
தனுசு
பணப்புழக்கம்
அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை
உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள்
கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
மகரம்
வருங்காலத்
திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை
கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வாகனத்தை சீர்
செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்
வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கும்பம்
நட்பு
வட்டம் விரியும். எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில
காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில்
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மீனம்
குடும்பத்தினருடன்
கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால்
ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு
ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
.jpeg)



















