Skip to content

நீட்' தேர்வு பயிற்சி மையம் 13ல் துவக்கம் : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு :

நீட் தேர்வு பயிற்சி மையத்தை வரும், 13ல் முதல்வர், பழனிசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாநில அளவில், 412 இடங்களில் பயிற்சி மையம் செயல்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச லேப்டாப் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று பேசியதாவது:தமிழக பிளஸ் 2 மாணவர்கள், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவில், 412 பயிற்சி மையங்கள் திறக்கப்பட உள்ளன.

இனி, 'ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்!'; கணினிமுன் அமர்ந்து கல்லூரியை தேர்வு செய்யலாம் :

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், 'ஆன் லைனில்' நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், வெளியூர் மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டிய அலைச்சல் இல்லை.

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு விசாரணை விபரம் :


இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு (WP-28558/2017) விசாரணைக்கு (8.11.2017) இன்று வந்தது.
விசாரணையின் போது, நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர் ஊதிய அநீதி குறித்து விரிவாக விளக்கினார்.

நீதியரசர் நான்கு வாரத்திற்குள் அரசு பதில் மனு அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.

பின்னரும் நமது வழக்கறிஞர் வாதத்தைத் தொடர்ந்தார்.

மீண்டும் மூன்று வாரத்திற்குள்ளாக அரசு பதில் அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.

நமது தரப்பில் மறுப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி 2016ல் அரசு வழங்கிய  எழுத்துப்பூர்வ  உத்தரவாத கடிதத்தை சுட்டிக்காட்டினார்.


நீதியரசரிடம் நமக்கு ஏற்பட்டுள்ள அநீதியை புரிந்து கொண்டார்.....

நீதியரசர் அரசு தரப்பைப் பார்த்து, "ஒரே பதவிக்கு" 1.6.2009 முன்பு ஒரு ஊதியம்  பின்பு ஒரு ஊதியம் என எப்படி இருவேறு ஊதியம் வழங்கப்படுகிறது எனக் கேட்டார்.*

அரசு தரப்பில் பதில் ஏதுமில்லை.
நமது தரப்பில் அரசாணை எண்--303 படி மூன்று மாத காலத்தில் விருப்பம் தெரிவிக்கலாம் என தெரிவித்துவிட்டு...
பின்னர்  அரசு நிதித்துறை கடிதம் மூலமாக 20 ம் தேதிக்குள்  விருப்பம் அளிக்க கட்டாயப்படுத்துகிறது எனக் கூறப்பட்டது.

நீதியரசர் உடனடியாக அரசு தரப்பில் நாளை மறுதினமே பதில் மனு தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டார்.*

நாளை மறுதினம் (10.11.2017) மீண்டும் விசாரணை தொடரும்.....

இடைநிலை ஆசிரியர்களுக்கு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....


தகவல்

ஜே.ராபர்ட்
2009&TET போராட்ட ஒருங்கிணைப்புக்குழு
மாநில அமைப்பு

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே அரசு உதவி பெரும் தொடக்க /நடு நிலை பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும் -தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு