Skip to content

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் அனைத்து துறை வேலை வாய்ப்புகள் 28 பக்கங்களில்:

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை:

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையின் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள கிடங்கு பொறுப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணி : கிடங்கு பொறுப்பாளர்

பணியிடம் : அர்த்தநாரீஸ்வரர் கோவில்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சம்பளம் : ரூ.15,900 முதல் ரூ.50,400

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு 22.02.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : உதவி ஆணையர்/செயல் அலுவலர் அலுவலகம், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637211.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2021

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://bit.ly/TNHRCENotification அல்லது கீழே இணைக்கப்பட்டுள் அறிவிப்பினைக் காணவும்.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் CMC எனும் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்று மருத்துவ ஆய்வகத் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கிருத்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Technical Assistant

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Medical Laboratory Technology பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://clin.cmcvellore.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.02.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவக்ள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant, JRF, SRF உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant, JRF, SRF உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ, எம்.எஸ்சி, பி.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 21

பணி : Technical Assistant, JRF, SRF

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி : பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ M.Sc/ Bachelor's Degree, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.16,000 முதல் ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 29.01.2021 kற்றும் பிப்ரவரி 2ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். Technical Assistant பணிக்கு 29.01.2021 அன்றும், JRF, SRF பணிகளுக்கு 02.02.2021 அன்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnausms.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தியாகராய கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

சென்னை தியாகராய செட்டி கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Theagaraya Chetty College

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், பல்கலைக்கழக வேலைகள்

வேலை: பாதுகாப்பு, ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் (Security, Lab Assistant, Record Clerk & Office Assistant)

கல்வித்தகுதி: 8th, 10th முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sirtheagarayacollege.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - The Secretary, Sir Theagaraya College, No: 1047 T.H Road,
Old Washermenpet, Chennai-600021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2021.

சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு:

சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம்

பணி : நீதியரசருக்கான உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 66

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 03.02.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mhc.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.

124 பக்கங்கள் கொண்ட இன்றைய 26-01-21- கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு:

நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க.!!!

நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க.!!!

பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாங்கித் தருகிறது.

பி.எஸ்.சி நர்சிங் முடித்து ஆங்கில திறன் அறியும் தேர்வான IELTS அல்லது OET போன்றவற்றில் 7 பேன்ட் அல்லது பி, சி கிரேடு வைத்துள்ளவர்களுக்கு அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 2 முதல் 2.5 லட்சம் மாத சம்பளத்தில் தமிழக அரசே வேலை வாங்கி தருகிறது.

அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் என்ற நிறுவனத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது. கிண்டியிலுள்ள இந்நிறுவனம் மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். டிப்ளமோ, பொறியியல், நர்சிங், துணை மருத்துவ படிப்புகள், எம்.பி.பி.எஸ்., பிட்டர், வெல்டர் போன்றவற்றில் ஐ.டி.ஐ., முடித்தவர்களை இவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நர்சிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. பிரிட்டன் அரசே 100 நர்சுகளை தங்கள் நாட்டு அரசு மருத்துவமனைகளுக்காக எடுக்கிறது. அவர்களுக்கான ஊதியம் 2.5 லட்சம் வரை. அதே போல் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வேலை பார்க்க 20 நர்சுகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இது தவிர கத்தார் தலைநகர் தோஹாவில் வேலை பார்க்கவும் நர்சுகள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தார் பணிக்கு ரூ.70 ஆயிரம் வரை சம்பளம். அதற்கென கத்தார் டேட்டா ப்ளோ அல்லது கத்தார் புரோமெட்ரிக் முடித்திருக்க வேண்டும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன., 31 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://www.omcmanpower.com/currentopenings.php தொடர்பு எண்: 044- 22505886.

இந்திய அணுசக்தி கழக வேலைவாய்ப்பு.. மாத ஊதியம் ரூ.44,900/- உடனே விண்ணப்பியுங்கள்..

 

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள Scientific Assistant, Leading Fireman பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12th, Diploma, B.Sc, Bachelor's Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL - Nuclear Power Corporation of India Ltd)

பணியின் பெயர் : Scientific Assistant, Leading Fireman

கல்வித்தகுதி : 12th, Diploma, B.Sc, Bachelor's Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலியிடங்கள் : 11

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 25-01-2021

மேலும் இந்த பணிகளுக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://drive.google.com/file/d/110pWFUaz6LjDs5JlZxSuRg0TbXDvGXZ6/view?usp=sharing

தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.4545/ESTT-1/2021

நிறுவனம்: கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கம்

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager(Shemes) - 01
சம்பளம்: மாதம் ரூ.55,500 - 1,75,700

பணி: Manager (Transport) - 01
பணி: Manager (Feed & Fodder) - 01
பணி: Manager (Purchase/Stores) - 01
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

பணி: Deputy Manager(Dairying) - 04
பணி: Deputy Manager (Dairy Chemist) - 03
பணி:Deputy Manager (Dairy Bacteriology) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800

பணி: Private Secretary Grade-III - 01
பணி: Executive (Civil) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 63600

தகுதி: ஒவ்வொரு பணிக்கு தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி அனைத்து பணியிடங்களுக்கும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The General Manager, T.D.C.M.P.U. Ltd., Coimbatore. பெருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, T.D.C.M.P.U. Ltd.,
Kalampalayam Post, Coimbatore - 641 010

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.02.2021

மேலும் விவரங்கள் அறிய www.aavinmilk.com அல்லது https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application%202021.pdf/3de38662-352b-e3d5-aeff-eb58b2a8869d என்ற அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வேலைவாய்ப்பு: "எழுதப்படிக்க தெரிந்தால் போதும்". அரசு வேலை ரெடி. உடனே போங்க..!!

வேலைவாய்ப்பு: "எழுதப்படிக்க தெரிந்தால் போதும்". அரசு வேலை ரெடி. உடனே போங்க..!!

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளை நிரப்புவதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி:

அலுவலக உதவியாளர் - 01
இரவுக்காவலர் - 01
ஈப்பு ஓட்டுநர் - 01

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இரவுக்காவலர் பணிக்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய அரசுச் சட்டம்59/1988)-ன்படி கீழான தகுதியுடைய அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை 25.01.2021 பிற்பகல் 05:45 மணிக்குள் "ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? ஆன்லைன்ல ரொம்ப ஈசியா எடுக்கலாம். எப்படி தெரியுமா..?

 

பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? ஆன்லைன்ல ரொம்ப ஈசியா எடுக்கலாம். எப்படி தெரியுமா..?

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி என்பதைதான் இங்கு பார்க்கபோகிறோம். உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு கம்ப்யூட்டர் கூட தேவையில்லை. அதற்கு உங்கள் மொபைலில் மத்திய அரசின் UMANG App மட்டும் டவுன்லோட் செய்யவேண்டும். UMANG App-ல் EPFO ஆப்ஷனுக்கு செல்லவேண்டும். அதில் 'Employee Centric' ஆப்ஷனை கிளிக் செய்து, 'Raise Claim' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களது EPF UAN Numberஐ பதிவிட வேண்டும். தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Passwordஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து 'Submit' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இதையடுத்து உங்களுக்கு 'Claim reference number' அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். UAN Number வுடன் ஆதார், பான்கார்டு ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு: "தமிழக மின்சார வாரியத்தில் உடனடி வேலை". உடனே போங்க..!!

வேலைவாய்ப்பு: "தமிழக மின்சார வாரியத்தில் உடனடி வேலை". உடனே போங்க..!! வேலைவாய்ப்பு: "தமிழக மின்சார வாரியத்தில் உடனடி வேலை". உடனே போங்க..!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) இருந்து தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Member

காலியிடங்கள்: 01

தகுதி: பதிவு செய்யும் பதிவாளர்கள் நல்ல திறன், ஒருமைப்பாடு, துறை ரீதியிலான செயல்பாடுகளில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் Engineering, Finance Commerce, Economics, Law or Management போன்ற செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதில் நல்ல நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 25.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் (FAC), எரிசக்தி துறை, செயலகம், சென்னை - 600009 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ வழங்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/job/tnerc_member_040121.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

IBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 :

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (IBPS-Institute of Banking Personnel Selection). Analyst Programmer, IT Engineer & Other பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ibps.in விண்ணப்பிக்கலாம். IBPS Recruitment Updates 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவிAnalyst Programmer, IT Engineer & Other
காலியிடங்கள்06
கல்வித்தகுதிB.Tech, M.Sc, MCA
சம்பளம்மாதம் ரூ.54,126/-
வயது வரம்புகுறைந்தபட்சம்: 21 ஆண்டுகள், அதிகபட்சம்: 35 ஆண்டுகள்
பணியிடம்மும்பை, மகாராஷ்டிரா
தேர்வு செய்யப்படும் முறைஇண்டர்வியூ
விண்ணப்ப கட்டணம்Rs. 1000/-
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி16 ஜனவரி 2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி08 பிப்ரவரி 2021

 

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா?

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Project Assistant

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : Life Science பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.12,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : கால்நடை நோயியல் துறை, மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பரி, சென்னை - 600007

நேர்முகத் தேர் நடைபெறும் தேதி : 25.01.2021ம் தேதி

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

Govt Job -ஊராட்சி ஒன்றியத்தில் வேலை: விண்ணப்பிக்க கடைசிநாள்: பிப்ரவரி 10!


கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரால் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி

பணிகள் : பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்: 17

ஊதியம்: ரூ.15,900 - 50,400

விண்ணப்பிக்க கடைசிநாள்: 10/02/2021

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://www.tamilyugam.in/wp-content/uploads/2021/01/Recruitment-in-Panchayat-Development-Department.pdf

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Driver - cum- PUMP Operator-cum-Fireman-A பதவிகளுக்கு வேலை வாய்ப்பு:

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Driver - cum- PUMP Operator-cum-Fireman-A பதவிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளது. https://www.npcil.nic.in/index.aspx என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க இந்த மாதம் 25 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-27

சம்பளம்: 21 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Deputy Manager (HRM),
HRM Section,
Madras atomic Power Station,
Nuclear Power Corporation of India Limited,
Kalpakkam- 603102.

தேர்வு முறை மற்றும் கூடுதல் விவரங்களை இந்த பிடிஎப் லிங்கை பார்த்துத் தெரிந்துக் கொள்ளவும் https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_22122020_01.pdf

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை. (அரசு நிர்ணய ஊதியம்):

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை. (அரசு நிர்ணய ஊதியம்):

ஆசிரியை தேவை நிரந்தரப்பணியிடம் ( அரசு நிர்ணய ஊதியம் ) வ.எண் . விபரம் இனம் கல்வித்தகுதி வேதியியல் முதுகலை M.Sc .. 1 . Oc . ( Chemistry ) பட்டதாரி ஆசிரியை B.Ed. , தகுதியுள்ள ஆசிரியை தங்களது கல்விச்சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஜெராக்ஸ் நகலுடன் விண்ணப்பிக்கவும் . கடைசி தேதி : 27.1.2021 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலர் , பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருமங்கலம் 625706 .

இந்தியன் வங்கியில் வேலை :


இந்தியன் வங்கியில் 1 காலியிடங்கள் அறிவிப்பு
இந்தியன் வங்கி பணிகள் 2021: இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் வங்கியில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்
நிறுவனம் / துறையின் பெயர்:
இந்தியன் வங்கி
துறையின் வகை:
மொத்தம் பணியிடங்கள்:
1
பணியின் பெயர்:
தலைமை பாதுகாப்பு அதிகாரி
இடம்:
சென்னை - தமிழ்நாடு
தொடக்க நாள்:
12-01-2021
கடைசி நாள்:
30-01-2021
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .

கல்வி தகுதி .


பணியின் பெயர்கல்வி தகுதி
தலைமை பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பை சரிபார்க்கவும் 

வயது வரம்பு .


பணியின் பெயர்வயது வரம்பு
தலைமை பாதுகாப்பு அதிகாரி அதிகபட்சம் 55 ஆண்டுகள்

தேர்வு செய்யும் முறை .

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்

பணியின் பெயர்சம்பளம்
தலைமை பாதுகாப்பு அதிகாரி ரூ. 89,890 - 1,00,350 / -

விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:

  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் பெயர் மொத்தம் பணிகள்
தலைமை பாதுகாப்பு அதிகாரி 1

"பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா"..? உங்களுக்கு 6 லட்சம் காப்பீடு இலவசம்..!!

 

"பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா"..? உங்களுக்கு 6 லட்சம் காப்பீடு இலவசம்..!!

அலுவலக ஊழியர்கள் பலருக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும்.

அதே போல் இபிஎப்ஓ சட்டத்தின்படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது. பத்தாண்டுகள் ஒருவர் கணக்கில் தொடர்ச்சியாக இத்தொகை செலுத்தப்பட்டு வந்தால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியதமாக கிடைக்கும்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு ஊழியரின் பெயரில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட உடன் ரூ.6 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டு விடுகிறது. இது ஒரு ஆயுள் காப்பீடு திட்டம். வேலையில் இருக்கும்போது திடீர் மரணம் ஏற்பட்டால் வாரிசுதாரர்களுக்கு இத்தொகை முழுவதுமாக தரப்படும்.