Skip to content

2021ஆம் ஆண்டு 'குரு அதிசார பெயர்ச்சி"... அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்? யார்?

 

சூரிய குடும்பத்தில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற எல்லா கிரகங்களும் அதிசார வக்கிர நிலையால் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு. அதை தான் அதிசார கிரகப்பெயர்ச்சி என்கிறோம்.

அந்த வகையில் இவ்வாண்டு குருபகவான், பங்குனி மாதம் 24ஆம் தேதி அதாவது ஏப்ரல் 6ஆம் தேதி அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சியாகிறார்.

சுப கிரகமாக விளங்கும் குருவானவர் கொடுப்பதில் கொடை வள்ளல் ஆவார். குரு இருக்கும் ராசியை விட குரு பார்க்கும் ராசிக்கு ஜாக்பாட் தான் என்பது ஜோதிட விதி.

அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற இருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும்? எந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் உண்டாகும்? என்பதை தெரிந்து கொள்வோம்.

அதிசார பெயர்ச்சி ஆகும் குருபகவான் தன்னுடைய பார்வையின் மூலம் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்கு யோக பலன்களை அள்ளிக் கொடுக்க போகிறார்.

பொதுவாக குருவின் பார்வை நம்முடைய ஜாதகத்தில் 5, 7, 9 ஆகிய நிலைகளில் இருக்கும் பொழுது நமக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிட நியதி.

மிதுனம் :

மிதுன ராசிக்கு குரு 5ஆம் பார்வையாக இருப்பதால் நீண்ட நாள் தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நிறைவேறும். தொழில், உத்தியோகம் சார்ந்த பிரச்சனைகள்; நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம் :

சிம்ம ராசியில் குரு ஏழாம் பார்வையாக இருப்பதால் ராஜயோகம் பெறுவீர்கள். இதுவரை தோல்விகளை சந்தித்து வந்த நீங்கள் இனி வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். உங்களுக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளும் சீராகி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த எதிரிகள் தொல்லை நீங்கி போட்டி, பொறாமைகள் போன்ற தொந்தரவுகள் இன்றி எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தைக் காண்பீர்கள்.

துலாம் :

குருவின் பார்வை துலாம் ராசியில் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும். உங்களை ஆட்டிப் படைத்த தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நற்பாதையை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள்.

தனுசு மற்றும் மீனம் :

தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு சுப பலன்கள் உண்டு.

அசுப பலன் பெறும் ராசிகள் :

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான், மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்க இருக்கிறார் என்பதால் இந்த ராசியில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பரிகாரம் :

அதிசார பெயர்ச்சி அடைந்த குருபகவான் 160 நாட்கள் வரை கும்ப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் குருபகவானை வழிபாடு செய்வது, குருபகவானுக்கு உரிய மந்திரங்களை உச்சரிப்பது, நவகிரக சன்னதியில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக்கடலை தானம் செய்வது போன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை காணலாம்.

தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள் :

பிலவ வருடப் பலன்கள்: தமிழ் வருடங்கள் 60-இல் தற்சமயம் நடப்பிலிருக்கும் 34-ஆவது ஆண்டான சார்வரி ஆண்டு, பங்குனி மாதம் 31-ஆம் தேதி (13/14.04.2021) பின்னிரவு 02.35.04 (ஐஎஸ்டி)மணியளவில் முடிவடைந்து, 35-ஆவது ஆண்டான பிலவ ஆண்டு, சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிறக்கிறது.

இந்த பிலவ வருடம் மகர லக்னத்தில், மேஷ ராசியில், சுக்கிர பகவானின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லக்னம், தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் லக்னத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்ன கேந்திரத்தில் ஆட்சி பெற்றுள்ள சனிபகவான் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகத்தைப் பெறுகிறார்.

லக்னமும், லக்னாதிபதியும் நன்றாக அமைந்திருந்தால்தான் மற்ற கிரகங்களால் உண்டாகும் யோக பலன்கள் பரிமளிக்கும் என்பது ஜோதிட விதி. அதாவது, பன்னிரண்டு பாவங்கள் இருந்தாலும் ஜாதகர் அடையப்போகும் சுக துக்கங்களில் 50சதவீதம் வெளிப்படுத்துவது லக்னமாகும் என்றால் மிகையாகாது.

"சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை' என்பது ஜோதிட மொழி. சனி பகவான் சுப பலத்துடன் இருப்பதால் இந்த ஆண்டு மேன்மையான பலன்கள் உண்டாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இத்தகைய அமைப்பினால் நமது நாட்டைப் பலரும் பாராட்டுவார்கள். உலக அரங்கில் மிக உயர்ந்த பொறுப்புகளும் கிடைக்கும். இரண்டாம் வீட்டோன் வலுத்திருப்பதால் அந்நியச் செலாவணியின் இருப்பு உயரிய நிலையை எட்டிவிடும்.

நம் நாட்டை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த நாடுகள் நமது பரோபகாரச் செயல்களின் விளைவுகளால் அடங்கி விடுவார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் நமது குரலுக்கு புதிய மதிப்பு உண்டாகும்.

உள்நாட்டு உற்பத்தி உயரும். பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருள்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். குறிப்பாக, காரீய உலோகத்தினால் உயரிய மதிப்பு உண்டாகி, அது சம்பந்தமான தொழில்கள் உயர்வடையும். முடங்கிக்கிடந்த தொழில்களும் அரசாங்கக் கொள்கை முடிவினால் இயங்கத் தொடங்கும். வல்லரசு நாடுகளும் நமது பேச்சுக்குச் செவி சாய்க்கும்.

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.

தனகாரகரான குரு பகவான் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார வகையிலும் நமது நாடு உதவி செய்யும். விதண்டாவாதம் செய்பவர்களை புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி, சாதுர்யத்துடன் பேசி வெற்றி கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.

சிறு சிறு விஷயங்களிலும் அக்கறை காட்டுவதால் அனாவசிய விரயங்களும் ஏற்படாது. ஆன்மிக விஷயங்கள், தெய்வ வழிபாடுகளும் நிரம்ப நடக்கும். குரு பகவானின் ஐந்தாம் பார்வை ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும் படிகிறது.

செவ்வாய் பகவான் பூமிகாரகராகி குரு பகவானின் அருட்பார்வையைப் பெறுவதால் எல்லை பிரச்னைகளில் சுமுகமான தீர்வு கிடைக்கும்.

மக்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க காப்பீட்டுத் திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுத்தப்படும். குரு பகவானின் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது.

"குரு பார்க்க கோடி புண்ணியம்', "குரு பார்க்க கோடி பாவநிவர்த்தி' என்பார்கள். அதாவது குரு பகவானின் சுபத்துவத்தால் நமது நாடு எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிக்கும் சக்தியைப் பெற்றுவிடும்!
குரு பகவானைப் பற்றிச் சொல்வதென்றால் அதற்கு எல்லை என்பதே கிடையாது. ஏனென்றால், எல்லையற்ற பரம்பொருளின் பிரதிநிதித்துவம் பெற்றவரல்லவா இந்த குரு பகவான்!

அவரின் பார்வையைப் பெற்றால் தானே இந்த உலகம் தழைத்து, கொழித்து, செழித்து விளங்க முடியும். அவரே புத்திர காரகராகவும் ஆவதால் நமது நாட்டு மாணவ, மாணவிகள் சிறப்பான சாதனைகளைச் செய்வார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான யோககாரகரான சுக்கிர பகவான் சுகம், கல்வி, வீடு, வாகன ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார்.

ஒரு கேந்திரம், திரிகோணத்திற்கோ, ஒரு திரிகோணம், கேந்திரத்திற்கோ அதிபதிகளாக வரும் கிரகங்களுக்கு "யோக காரகர்' என்று பெயர் என்பதை அனைவரும் அறிந்ததே!

சுக்கிர பகவானின் அருட்பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீது படிகிறது. சுக்கிர பகவானே வாகன காரகராக ஆவதால், போக்குவரத்துத் துறை நவீன மயமாக்கப்படும். வாகனங்கள் புதிய பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டு உருவாக்கப்படும். "குறைந்த விலையில் அனைவருக்கும் வாகனம்' என்கிற நிலை உருவாகும். நெடுநாளாக நலிவுற்றிருந்த நூல், ஜவுளி சம்பந்தப்பட்ட தொழில் வேகமாக வளர்ச்சி அடையும். வெள்ளி உலோகத்தையும் பயன்படுத்தும் துறைகள் வளர்ச்சி காணும்.

விவசாயம் விருத்தி அடையும். சுக்கிர பகவான் பிராணிகளுக்கும் காரகத்துவம் வகிப்பாராகையால், மாடு, கன்றுகளை வைத்துப் பராமரிப்பவர்கள், பால் உணவு சம்பந்தப்பட்ட துறைகளும் வளர்ச்சி அடையும். சிமெண்ட் துறையும் துரித வளர்ச்சி அடையும். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்பராசியை அடைகிறார். மீன ராசியில் உச்சம் பெறும் சுக்கிர பகவான் சந்திர கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால், புத பகவானுக்கு "நீச்சபங்க ராஜயோகம்' உண்டாகிறது.

புத பகவான் நேர் பார்வையாக தன் ஆட்சி, உச்சம் மூலத் திரிகோண வீடான, பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்கிறார். நமது நாட்டு தூதுவர்களின் சாதுர்யமான பேச்சு எதிரிகளுக்குத் தக்க பதிலடியாக அமையும். பன்னாட்டு நீதிமன்றத்திலும் நமது நாட்டிற்கு முக்கிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற கடவுள் சிலைகள் திரும்ப நமது நாட்டிற்கு வந்து சேரும்.

புள்ளியியல் துறையில் ஒரு குறிப்பிட்ட புதுமையான வழிமுறையைக் கண்டுபிடித்து உலகிற்கு அறியப்படுத்தும் யோகமும் உண்டாகும். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். லக்னத்திற்கு நான்காம் வீடான கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக சுபாவ அசுப கிரகமான செவ்வாய் பகவான் அமைவதால் அவர் லக்ன சுபராகவே கருதப்படுகிறார்.

சர லக்னத்திற்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீடு பாதக ஸ்தானமாகவும் அமைவதால் அந்த வீட்டுக்குரிய கிரகம் மறைவு பெற்றிருப்பது சிறப்பாகும். அதோடு அவரை குருபகவான் பார்வை செய்வது "பருத்தி புடவையாய்க் காய்த்தது' என்பார்களே அதுபோல் நன்மைகள் கூடிவிடும்.

செவ்வாய் பகவான் பொறியியல் துறைக்கும் காரகம் வகிக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே! துணிவு, நுண்ணிய அறிவுக்கும் காரணமாவதால் பொறியியல் துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்து, பல கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, உள்நாட்டு உற்பத்தி குறித்த இலக்கினை எட்டிவிடும். நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ஏழாம் வீடு என்பது சட்டப்பூர்வமான பிணைப்பாகும். இந்தப் பிணைப்பால் நமது நாட்டின் நட்பு பல நாடுகளுக்கு விரிவடையும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதோடு அடிக்கடி செய்யும் பயணத்தையும் குறிக்கும்.

இந்தப் பிலவ ஆண்டில் நமது நட்பு நாடுகளால் சந்தோஷமும், அமைதியும் உண்டாகும். ஏழாம் வீடு நீர் ராசியாகவும், சர ராசியாகவும், அந்த வீட்டுக்கு அதிபதி சர ராசியில் யோகாதிபதியின் சாரத்தில் இருப்பதால் நீரால் சூழப்பட்ட நாடுகள், செழிப்பான தீவுகளைக் கொண்ட நாடுகளின் நட்பு உயர்வைத் தரும். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டுக்கு அதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். சூரிய, சந்திர பகவான்களுக்கு அஷ்டமாதிபத்ய தோஷம் இல்லை என்பது ஜோதிட விதி!

மகர லக்னத்திற்கு சூரிய பகவான் அஷ்டமாதிபதியாக வருவதால் அஷ்டமாதிபத்ய தோஷம் ஏற்படாமல் மாறாக நன்மைகளே உண்டாகிறது என்பதும் அனுபவ உண்மை.

ராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் லக்ன சுபரான புத பகவானின் வீடான மிதுன ராசியை அடைகிறார்.

கேது பகவான் லாப ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் குரு பகவானின் மூலத் திரிகோண ராசியான தனுசு ராசியை அடைகிறார்.

இப்படியான வலுவான சுப பலத்துடன் பிறக்கும் பிலவ ஆண்டில், நமது நாடு அனைத்து விஷயங்களில் தன்னிறைவு அடைந்து, நோய்நொடிகள் தீர்ந்து, சுபிட்சங்களும், அதிர்ஷ்டங்களும் நிறைய எல்லாம் வல்ல இறைவனை எங்கள் சார்பாகவும், தினமணி வாசகர்களின் சார்பாகவும் பிரார்த்திக்கிறோம். இனி தமிழ்ப் புத்தாண்டு பலன்களுக்குச் செல்வோம்..!

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.63,000 சம்பளத்தில்.. அஞ்சல்துறையில் அருமையான வேலை.!!!

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver.

காலி பணியிடங்கள்:4

கடைசி தேதி: 30.04.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு ; 18 வயது முதல் 30 க்குள்..

கல்வித் தகுதி:

Tyreman, Blacksmith கல்வி தகுதி: அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அந்தந்த வர்த்தகத்தில் (A certificate in the respective trade) இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Staff car Driver கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: Trade Test/Skill Test, Driving Test

மாத ஊதியம்:
Tyreman - ரூ.19,900- 63,200
Blacksmith - ரூ.19,900- 63,200
Staff car Driver - ரூ.19,900- 63,200

மேலும் விவரங்களுக்கு https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

 

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

BANK OF MAHARASHTRA அதிகாரபூர்வ இணையதளத்தில் Generalist Officer காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Bachelor's degree கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (MAHARASHTRA) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Online examination) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : BANK OF MAHARASHTRA

பணியின் பெயர் : Generalist Officer

கல்வித்தகுதி : Bachelor's degree

பணியிடம் : MAHARASHTRA

தேர்வு முறை : Online examination

மொத்த காலிப்பணியிடம் : 150

சம்பளம் : 48,170 - 69,810/-

கடைசி நாள் : 06.04.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/a0ab94ef-0ae6-4e05-8f2b-2b5d0a06c807.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் இந்திய கடலோர காவல் படையில் பணியாற்றலாம் வாங்க!

 

ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் இந்திய கடலோர காவல் படையில் பணியாற்றலாம் வாங்க!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Principal Private Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு மத்திய அரசுத் துறையில் தட்டச்சராக பணியாற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.39 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கடலோர காவல் படை (Indian Coast Guard)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Principal Private Secretary (PPS)

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

கல்வித் தகுதி : மத்திய அரசுத் துறையில் தட்டச்சராக பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.6,600 முதல் ரூ.39,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 11.04.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Directorate of Personnel, Coast Guard

Headquarters, National Stadium Complex, New Delhi-110001

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indiancoastguard.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

அடேங்கப்பா! ரூ.9 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியாவில் வேலை!

 

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் (DIC) காலியாக உள்ள Sr. Developer (PHP) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.9 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக், எம்.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Sr. Developer (PHP)

கல்வித் தகுதி :

  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சி.எஸ், ஐடி பாடப்பிரிவுகளில் பி.இஇ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Web Application Development பணிகளில் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ஆண்டுக்கு ரூ.9 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.04.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Sr. General Manager (Admin. /HR)

Digital India Corporation

Electronics Niketan Annexe

6 CGO Complex, Lodhi Road

New Delhi - 110003

Tel.: +91 (11) 24360199, 24301756

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dic.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.

8th, 10th முடித்தவர்களுக்கு.. இந்திய ராணுவத்தில் வேலை | சம்பளம் :GOOD| LAST DATE :26.04.2021:

Indian Army Bangalore Rally -ல் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : Indian Army Bangalore Rally

பணியின் பெயர்கள் : Soldier General Duty (All Arms), Soldier Technical, Soldier Tradesman, Soldier Tradesman (Mess Keeper and House Keeper), Soldier Clerk/ Store Keeper Technical/ Inventory Managements (All Arms), Soldier Tech Nursing Assistant/ Nursing Assistance Veterinary

கல்வித்தகுதி : 8th, 10th, 12th

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 26.04.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/RO_HQ__KOLAR_RALLY_NOTFN.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

விமான நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் :

 


இந்துஸ்தான்ஏரோநாட்டிக்கல் லிமி டெட் நிறுவனத்தில்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: டிசைன் டிரைய்னி 60, மேனேஜ்மென்ட் டிரைய்னி 40 என 100 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிசைன் டிரைய்னி பதவிக்கு ஏரோநாட்டிக்கல், எலக்ட்ரிக் கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்பிரிவிலும், மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு எலக்ட்ரிக்கல் , எலக்ட்ரானிக்ஸ் , மெக்கானிக்கல் , மெட்டலர்ஜி , கம்ப்யூட் டர் சயின்ஸ் பிரிவிலும் 65%

மதிப்பெண்ணுடன் பி . இ ., முடித்திருக்க

வேண்டும் .

வயது : 5.4.2021 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் . இதிலி ருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது .

தேர்ச்சி முறை : இணையதள தேர்வு , நேர்முகத்தேர்வு , மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும் .

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி .

விண்ணப்பக்கட்டணம் ரூ .500. தாழ்த்தப்பட்ட / பழங்குடி பிரிவினருக்கு கட்டணம் இல்லை .

கடைசி நாள் : 5.4.2021 மதியம் 3:00 மணி .

விபரங்களுக்கு : https://online.cbexams.com/halmdtreg2021/Inc/DETAILEDADVERTISEMENT.pdf

டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு.. தெற்கு ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்.!!!

தென் மத்திய ரயில்வேயிகாலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: இளநிலை பொறியாளர், மொழிபெயர்ப்பாளர், சுருக்கெழுத்தர்.

காலியிடங்கள்:50.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பி.இ தேர்ச்சி.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14. 4. 2021.

மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


பேங்க் ஆஃப் பரோடா சூப்பரான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Part-Time Medical Consultants பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அவ்வங்கி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

Part-Time Medical Consultants பணிகளுக்காக காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

M.D. in General Medicine தேர்ச்சியுடன் பணியில் 03 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

M.B.B.S தேர்ச்சியுடன் பணியில் 05 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/medical-consultant-24-03-2021.pdf

Application Form – https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/format-of-application-for-part-time-medical-consultant-24-03-2021.pdf

டெக் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.


ெக் மஹிந்திரா லிமிடெட் (Tech Mahindra Limited) என்னும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Sr. Software Engineer, Tech Lead & Associate Business Consultant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

Sr. Software Engineer, Tech Lead & Associate Business Consultant பணிகளுக்கு 35 காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Higher Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Spring Boot திறன்கள் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test, Technical Round மற்றும் HR Round மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification – https://careers.techmahindra.com/CurrentOpportunity.aspx

B.E./ B.Tech படித்தவர்களுக்கு..ஆதார் துறையில் அதிரடி வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!


ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI - NISG

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: TECHNICAL ANALYST (IS)

கல்வித்தகுதி: B.E./ B.Tech/BBA/BCA or M.Tech. / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://careers.nisg.org/job-listings-technical-analyst-is-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-5-to-10-years-190321004805 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.04.2021

10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

 

10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது சிவில் மோட்டார் டிரைவர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடக்ளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : Ministry of Defence

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Civil Motor Driver

கல்வி தகுதி :

  • சிவில் மோட்டார் பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்று, கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், குறைந்தது 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : சிவிலியன் மோட்டார் டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில் மாதம்

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமம் உள்ளவர்கள் வரும் 03.04.2021 தேதிக்குள் அதிகாரி கட்டளை, 756 (I) Tpt PL ASC (Civ GT), கோட்டை செயிண்ட் ஜார்ஜ், சென்னை - 600009 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : உடற் தகுதித் திறன், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் https://www.mod.gov.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

source: tamil.careerindia.com

B.E, B.Tech, Diplomo முடித்தால் போதும். மாதம் ரூ.1,00,000 சம்பளத்தில்.. நாணயங்கள் உற்பத்தி கழகத்தில் வேலை..!!!

 

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்தி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்தி கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:: Printing supervisor, Technical control
காலி பணியிடங்கள்: 12
கல்வித்தகுதி: Printing technology, computer science டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம்.
சம்பளம்: ரூ.26,000 - ரூ.1,00,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 10

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://spphyderabad.spmcil.com/interface/home.aspx என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு..

இந்தியன் ரயில்வே கட்டுமான ஆணையமான IRCON ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Works Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: IRCON

பணியின் பெயர்: Works Engineer

பணியிடங்கள்: 74

வயது வரம்பு : அதிகபட்சம் 30 வயது வரை

கல்வித்தகுதி : Civil Engineering மற்றும் Electrical Engg, Electronics Engg., Electrical & Electronics Engg., Electronics & Communication Engg., Electronics & Instrumentation Engg., Instrumentation & Control Engg., Computer Science தேர்ச்சி.

ஊதிய விவரம் : ரூ.36,000/-

தேர்வு செயல்முறை : எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் முறை

மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Official PDF Notification – https://www.ircon.org/images/file/HRM/2019/Advt_C_02_2021.pdf

Apply Online – http://career.ircon.in/erec/

கடைசி தேதி: 18.04.2021

ஒரு டிகிரி போதும்.. வங்கியில் 150 காலியிடங்கள்.. கடைசி தேதி ஏப்ரல்-6.!!!


பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Generalist Officers.

பணியிடங்கள்: 150.

பணியிடம்: நாடு முழுவதும்.

கல்வித்தகுதி:டிகிரி.

வயது: 25-35.

தேர்வு: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் -6.

மேலும் விவரங்களுக்கு www.bankofmaharastra.in.

பால.ரமேஷ். தினம் ஒரு குட்டிக்கதை . ஒருமுறை, கென்ய ஓட்ட பந்தய வீரர் எபெல் முடய், எல்லை குறியை அடைய சில மீட்டர் தூரம் தான் இருந்தது.

பால.ரமேஷ்.
தினம் ஒரு குட்டிக்கதை .

ஒருமுறை, கென்ய ஓட்ட பந்தய வீரர் எபெல் முடய், எல்லை குறியை அடைய சில மீட்டர் தூரம் தான் இருந்தது.

ஆனால் குறியீடுகளை பார்த்து குழம்பி போய் இலக்கை அடைந்து விட்டதாக நினைத்து நின்று விட்டார்.

பின்னால் வந்த ஸ்பெயின் நாட்டின் ஐவன் பெர்னான்டஸ் இதை சுதாரித்து கொண்டு எபெலை தொடர்ந்து ஓட சொல்லி சத்தமிட்டார். எபெலுக்கு ஸ்பானிய மொழி தெரியாததால் இவர் சொன்னது புரியவில்லை.

இதை புரிந்து கொண்ட ஐவன் பெர்னான்டஸ், முடய்'யை இலக்குக்கு நேராய் உந்தி தள்ளினார்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் ஐவனிடம் கேட்டபோது,

"என்றாவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுகிற ஒரு சமுதாயமாக மாறுவோம் என்பது தான் என கனவு" என்றார்...

ஏன் அந்த கென்னியரை வெல்ல விட்டீர்கள் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, "நான் அவரை வெற்றிபெற விடவில்லை, அவரே வெற்றிக்கு அருகில் வந்து விட்டார். இந்த பந்தயம் அவருடையது" என்றார்....

நீங்கள் வென்றிருக்கலாம் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது,

அந்த வெற்றியின் சிறப்பு என்னவாக இருக்கும்?

இந்த பதக்கத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?

என் தாய் ..எனது குடும்பம் என்ன நினைப்பார்கள்?

நற்பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

நாம் நம் குழந்தைகளுக்கு எப்படி பட்ட பண்புகளை கற்று கொடுக்கிறோம்?
எந்த அளவுக்கு மற்றவர்களை நற்பண்புகளால் ஈர்க்கிறோம்? நம்மில் பலரும் மற்றவர்களின் பலவீனத்தில் உதவி செய்வதை விட அதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறோம்.

சுயநலமாய் இருப்பதை விட்டு,ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுவோம். நாம் எல்லாருமே வெற்றிக்கு தகுதி ஆனவர்கள்...

என்று கூறி முடித்தார்.

 நீதி: மனசாட்சியே இறைவனின் ஆட்சி.. மனசாட்சியை கொல்லும்போதே/கேட்காமல் சுயநலமாய் செயல்படும்போதே இறைவன் அங்கிருந்து நீங்கிவிடுகிறார். வெறுமனே தெய்வத்தை வணங்குவது மட்டும் பயனில்லை.

ITI முடித்தவர்களுக்கு மாருதி சுசுகி நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..


மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் எனப்படும் தனியார் வாகன நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: Maruti Suzuki India Limited

பணியின் பெயர்: Apprentice

பணியிடங்கள்: Various

வயது வரம்பு : 18 – 23 வயது வரை

கல்வித்தகுதி : ITI தேர்ச்சி

தேர்வு செயல்முறை : Online Test (Technical, Aptitude & Behavioral) மற்றும் Personal Interview

கடைசி தேதி: 10.04.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

மேலும் விபரங்களுக்கு இந்த https://register.cocubes.com/msil-2020 லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!


தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.58 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டள்ள இப்பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : பாதுகாப்பு அதிகாரி

கல்வித் தகுதி : முன்னாள் படைவீரர்கள் ஜே.சி.ஓ (சுபேதார் அல்லது உயர் பதவி) அல்லது துணை இராணுவப் படையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாதுகாப்பில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.58,231 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cecri.res.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் 16.10.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : The Administrative Officer, CSIR-CECRI, Karaikudi-630003

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 05.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.cecri.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

IMPCOPS-இல் கொட்டி கிடக்கும் வேலை.. ரூ.1,12,400 வரை சம்பாதிக்கலாம்.. உடனே போங்க.!!!

இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனையில்(IMPCOPS) காலியாகவுள்ள பண்ணியிடங்களை நிரப்ப வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Clerk, Electirician, Fitter உள்ளிட்ட பல பணியிடங்கள்.

ஊதியம்: ரூ.1,12,400 வரை.

விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.250.

மேலும் கடைசி தேதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பம் அனுப்பும் முகவரி உள்ளிட்ட முழுமையான தகவலை பார்க்க https://www.impcops.org என்ற இணையதளத்திற்கு செல்லவும்.