Skip to content

ரூ.2,20,000/- ஊதியத்தில் VOC துறைமுகத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!! - தேர்வு,நேர்காணல் கிடையாது!!

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Deputy Chief Engineer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

பணியிடங்கள் :

Deputy Chief Engineer பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைமுக வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Civil பாடப்பிரிவில் BE/ B.Tech இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 12 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம்:

குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.08.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Dy.CE.pdf.pdf

ரூ.23,000/- ஊதியத்தில் ECIL கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம்!!


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மின்னணு நிறுவனத்தில் (ECIL) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஒப்பந்த அடிப்படையில் Technical Officer பணிகளுக்கு 04 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

விண்ணப்பதாரர்கள் 31.05.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Electronics & Communication / Computer Science ஆகிய பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இப்பணியில் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும். பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 17.06.2021 மற்றும் 19.06.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் விண்ணப்பம் மற்றும் அசல் கல்வி ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவ மாதிரியினை அதிகாரப்பூர்வ தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Official PDF Notification – http://www.ecil.co.in/jobs/Advt_No_22_2021.pdf

பிஇ, பிடெக் படித்தவர்களுக்கு. மாதம் ரூ.45,000 சம்பளத்தில். ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.!!!


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்

பணி: Graduate Engineer

தகுதி: பிஇ, பிடெக்

சம்பளம்: ரூ.45,000 அதிகபட்சம்

வயது வரம்பு: 22 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் நேர்காணல் அடிப்படையிலேயே விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு.

மொத்த பணியிடங்கள்: 03.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2021

மேலும் விவரங்களுக்கு: Advertisement_for_Contract_Engagement-ERP.pdf (oil-india.com) என்ற இணையதளத்தை பார்க்கவும்.

TN-SET 2021 : தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!


Tamil Nadu State Eligibility Test (TN-SET 2021) அதிகாரபூர்வ இணையதளத்தில் Associate Professor காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Master degree, Degree கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamilnadu) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Tamil Nadu State Eligibility Test (TN-SET 2021)

பணியின் பெயர் : Associate Professor

கல்வித்தகுதி : Master degree, Degree

பணியிடம் : Tamilnadu

தேர்வு முறை : Interview

விண்ணப்பிக்கும் முறை : Online

கடைசி நாள் : 07.07.2021

முழு விவரம் : https://drive.google.com/file/d/14YayKTXqrTBTRn8KfDzPX0i2iOqLimqC/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மாதம் ரூ. 25,000 சம்பளத்தில். இந்திய ரயில்வே நிறுவனத்தில் வேலை. அப்ளை பண்ணுங்க.!!!


இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன்

பணி: ஆலோசகர்

தகுதி: டிகிரி

வயது வரம்பு: 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.25,000 வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2021

மேலும் விண்ணபங்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு; Advertisement Consultant 2021.docx (irfc.nic.in)

B.E பட்டதாரிகளுக்கு.. மாதம் ரூ.41,000 சம்பளத்தில்.. தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை..!!!


இந்திய தேசிய நெடுஞ்சாலையில் காலியாக பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: இணை மேலாளர் (டெக்னிக்கல்)
காலி பணியிடங்கள்: 41
கல்வித்தகுதி: B.E (civil)
சம்பளம்: ரூ.21,000 - ரூ.41,000

மேலும் இது பற்றிய முழு விவரங்கள் அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://nhai.gov.in என்ற இணையத்தள பக்கத்தை பார்க்கவும்.

பல்வேறு பாட பிரிவுகளுக்கு திறமையும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggvpnmEq5FDnxXsms_e5lscyboftO455YMSKjAzBK281fHFCp4RehPg9mh_ezrAAtR79VgYsWluJCcw_ekYJTJVzKmcWBfWvSGNd3SAJAtMRz5id6BDny7IYbemkGpgRssrmg-1R6_VGS-/s640/teachers+wanted.jpg

வள்ளலார் மேல்நிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட பாடங்களுக்கு திறமையும், அனுபவமும் வாய்ந்த முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.

தமிழ், 

ஆங்கிலம், 

கணிதம், 

இயற்பியல், 

வேதியியல், 

தாவரவியல், 

விலங்கியல், 

கணினி 

அறிவியல், 

வரலாறு, 

பொருளியல், 

வணிகவியல், 

கணக்குப்பதிவியல், 

நர்சிங் இளநிலை உதவியாளர் - B.Com., உடன் Tally முடித்திருக்க வேண்டும். 

TEACHERS WANTED 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 23.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி secretaryvallalar@gmail.com தொடர்புக்கு: 99444 99411, 97863 42200

IMMEDIATE REQUIREMENT at BHARAT BIOTECH (Makers of COVAXIN):


POSITIONS OPEN in:
Production, Quality Control, Quality Assurance, Engineering & Maintenance, Packing & Inspection Departments.

EXPERIENCE: Freshers & Experienced Professionals

QUALIFICATION:
ITI/ Diploma (Mechanical, Electrical, Fitter, Boiler, other)
DMLT (Diploma in Medical Lab Tech.)
B. Sc./B.Pharm.,
MSc./M.Pharm.,
Ph.D.

JOB LOCATIONS:
1. Manjari Khurd/Wagholi, Pune.
2. Malur, Bangalore.
3. Hyderabad, Telangana.
4. Ankaleshwar, Gujarat.

Please share CV / Resume to:
careers@bharatbiotech.com

ஆசிரியர் தேவை - நிரந்தர பணி - INTERVIEW ON 18.6.2021 pdf :

ஆசிரியர் தேவை - நிரந்தர பணி  - pdf- INTERVIEW ON 18.6.2021

CLICK HERE TO DOWNLOAD-PDF FILE

சரக்கு ரயில் நிறுவனத்தில் 1074 காலியிடங்கள்.. கடைசி தேதி 21.7.21.. உடனே அப்ளை பண்ணுங்க.!!!


Freight Corridor Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 1074.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.7.2021.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

மேலும் இது குறித்த விவரங்களுக்கு https://dfccil.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

டிகிரி முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.30,000 சம்பளத்தில்.. இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலை...!!!!


இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst ஆகிய பணிகளுக்கு மொத்தம 12 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: Any Degree, Any Post Graduate

வயது: 25 - 35

சம்பளம்: மாதம் ரூ.17,000 - ரூ.30,000

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://indianspices.com/opportunities/details.html?id=316

பிளிப்கார்ட் நிறுவனத்தில் அதிரடி வேலைவாய்ப்பு. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

ஆன்லைன் வர்த்தக முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : பிளிப்கார்ட் (Flipkart)

பணி : காய், கனிகள் சூப்பர்வைசர்கள் தேவை (City Supervisor, Fruit & Vegetable Quality)

பணியிடம் : தமிழ்நாடு

பணி அனுபவம் : 4 முதல் 6 வருடங்கள்

காலியிடம், தகுதிகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=rhenRiTRLPM

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.

சேலம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கலாம்.

மத்திய அரசின் தேசிய தொழில் சேவை பிரிவில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட முகாம் நடைபெற உள்ளது. தற்போதுய் கொரோனா காலகட்டம் என்பதனால் பாதுகாப்பு கருதி இந்த முகாம்கள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

காலியிடங்கள் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பலதரப்பட்ட நிறுவனங்களில் காலியாக உள்ளது. கல்வித்தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் முறையாக கலந்து கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் நாள் - ஜூன் 18,19,25 மற்றும் 26
முகாம் நடைபெறும் நேரம் - காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் இடம் - முகாம் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது.

அதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். இணையம்: https://www.ncs.gov.in/_layouts/15/NCSP/Calendar.aspx

ஓய்வு பெற்றவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்தியன் வங்கியில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க.!!!

இந்தியன் வங்கியில் தேர்வு இல்லாமல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: இந்தியன் வங்கி

தகுதி: RBI, NABARD, SIDBI, Commercial Bank போன்ற எதவாது ஒரு வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்

வயது வரம்பு: 68 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு கிடையாது நேர்முக தேர்வு அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படும்.

மாத ஊதியம்: ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும் .

நேர்முக தேர்வு: 26.05.2021

விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் கிடையாது

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.06.2021

மொத்த பணியிடங்கள்: 01

மேலும் விவரங்களுக்கு: MODIFIED-ADVERTISEMENT.pdf (indianbank.in)

10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.38,000 சம்பளத்தில். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை.!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் NLC வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)

மொத்த காலியிடங்கள் : 65

பணி :SME Operator

கல்வித் தகுதி: 10th, ITI

வயது வரம்பு: 63 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.38,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2021

கூடுதல் விவரங்களை www.nlcindia.in/new_website/careers/SME%20Operator%20FTE.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளவும்.

https://www.nlcindia.in/new_website/index.html

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்கில் நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு.!


Tamilnad Mercantile Bank limited (TMB) அதிகாரபூர்வ இணையதளத்தில் IT Specialist காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.Tech/B.E, MCA கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tuticorin, Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Tamilnad Mercantile Bank limited (TMB)

பணியின் பெயர் : IT Specialist

கல்வித்தகுதி : B.Tech/B.E, MCA

பணியிடம் : Tuticorin, Chennai

தேர்வு முறை : Interview

விண்ணப்பிக்கும் முறை : Online

சம்பளம் : 36000(Per Month)

கடைசி நாள் : 21-06-2021

முழு விவரம் : https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_WEBIT_20212201.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தேர்வு இல்லை, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : தென்னக ரயில்வே பயிற்சி வேலையில் விண்ணப்பிப்பது எப்படி?

தென்னக ரயில்வே துறையில் பணிபுரிந்து தொழில் பயில தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒரு பயிற்சி வேலை வாய்ப்பை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

என்ன மாதிரியான வேலை ?

கதிரியக்கவியல், நோயியல் மற்றும் இருதயவியல், எலக்ட்ரீஷியன், டி.எஸ்.எல் மெக்கானிக், ஏர் கண்டிஷனிங் மெக்கானிக், எம்.எம்.வி, எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், PASSA, எம்.எல்.டி கதிரியக்கவியல், எம்.எல்.டி நோயியல், எம்.எல்.டி இருதயவியல், தச்சு, வயர்மேன், டர்னர், ஃபிட்டர், வெல்டர், பெயிண்டர் ஆகிய மேற்கொண்ட பணிகளுக்கு பயிற்சி வேலைக்கு தென்னக ரயில்வேயில் ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை தகுதி ?

தகுதி தேர்வுகள் எதுவுமே கிடையாது. 10-வது பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைந்திருக்கு வேண்டும் அல்லது ஐடிஐ படித்தவர்கள் அதில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 15 - இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அதிகபட்ச வயது 22 முதல் 34 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பணியிடங்கள் உள்ளன ?

மொத்தம் 3378 பயிற்சி பணிக்கான காலி இடங்கள் இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மொத்த பயிற்சி பணிக்கான காலம், ஒரு வருடத்தில் இருந்து 2 வருடம் வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் சென்று பயிற்சி வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இணைய விண்ணப்பத்திற்கு ரூபாய் 100 கட்டணம் செலுத்தவேண்டும், SC/ST/மாற்று திறனாளிகள்/ மகளிர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டாம். மாதம் ரூபாய் 7000 உதவித்தொகையாக வழங்கப்படும், பயிற்சி முடிவடைந்தவுடன் நிச்சயம் ரயில்வே பணியில் வேலைக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது. ஆனால் இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு 20 சதவீதம் பணி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2021, நேரம் மாலை 5 மணி வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.