Skip to content

தேசிய திறனாய்வு தேர்வு (NATIONAL TALENT SEARCH EXAMINATION-NOV 2013) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது:

அனைத்து வகை பள்ளிகளிலும், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, கடந்த நவம்பரில், தேசிய திறனாய்வு தேர்வை, தேர்வுத் துறை நடத்தியது.இதில், 97 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவை, www.tndge.in என்றஇணையதளத்தில், தேர்வுத் துறை, நேற்று வெளியிட்டது. மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படும், 240 பேருக்கு, பிளஸ் 1 முதல், பி.எச்டி., வரை, ஆண்டுதோறும், குறிப்பிட்ட தொகையை, கல்வி உதவித்தொகையாக, மத்திய அரசு வழங்கும்.