Skip to content

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்.

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்.
கறுப்பு பணம், கள்ள நோட்டு பிரச்னைக்கு தீர்வாக, 500,1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த மத்திய அரசு, அடுத்த அதிரடியாக, சொத்து பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளை ஆராய துவங்கி உள்ளது.
கறுப்பு பணம், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. அடுத்தகட்டமாக, தங்க நகை விற்பனை, சொத்து பரிமாற்றத்திலும் அதிரடி கட்டுப்பாடுகள் வரலாம் என கூறப்படுகிறது.
சொத்து பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதை கட்டாயமாக்கி, யார் பெயரில் எவ்வளவு அசையா சொத்து உள்ளது என்பதை கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கத் துக்காக உருவாக்கப்பட்ட, வரைவு விற்பனை பத்திர நகலில், விற்பவர், வாங்குபவர் இருவரும், ஆதார் மற்றும் பான் எண்களை குறிப்பிடுவது கட்டாயமாக் கப்பட்டு உள்ளது.பரிமாற்றத்துக்கு வரும் சொத்துக்கள், யார் பெயரில் இருந்து யார் பெயருக்கு செல்கிறது என்பது, இதனால் வெளிச்சத்துக்கு வந்துவிடும். இதேபோல பரிமாற்றத்துக்கு வராமல், ஒரே நபர் பெயரில் நீண்ட காலமாக இருக்கும் சொத்துக்களின் பத்திரங்களி லும், ஆதார் எண்களை சேர்ப்பதற்கான கட்டுப்பாடு களை விதிக்க, மத்திய அரசு தயாராகி வருகிறது.விற்பவர், வாங்குபவரின் நிலவரத்தை ஆதார் எண்ணை பயன்படுத்தி கண்காணிக்க இது உதவ லாம். மேலும் விற்பனைக்கு வராத சொத்துக்களை, கணக்கில்கொண்டு வரும்முயற்சியாக, அதிலும் ஆதார் எண் சேர்ப்பதை கட்டாயமாக்க போவதாக தெரிகிறது.
இதுகுறித்து, சட்ட வல்லுனரும், கேரள அரசின் ஆலோசகருமான ஷியாம் சுந்தர் கூறியதாவது:சொத்து பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதில்,சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும், ஒவ்வொரு சொத்துக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்குவது, அரசின் நோக்கத்தை நிறைவேற்றும். சார் பதிவாளர் அலுவலகம், கிராமம், பகுதி, பதிவு செய்யப் பட்ட ஆண்டு ஆகியவற்றை உள்ளடக்கியதாக, பிரத்யேக எண் இருக்க வேண்டும்.
கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், இத்திட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டாதது, முறைகேடுகளுக்கு வழிவகுப்ப தாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.