ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அமைச்சர் செங்கோட்டையன்: அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு, மத்திய அரசு இன்னமும் நிதி வழங்கவில்லை. எனினும், மாநில
அரசு, 176 கோடி ரூபாய் ஒதுக்கி, கல்விக் கட்டணம் வழங்கி உள்ளது. இலவசப்
பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை.
தி.மு.க., - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில்,
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும்
உள்ளது. ஒரு மாணவனுக்கு, இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலை உள்ளது.
இப்பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் கூறியது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று,
மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற நிலை
ஏற்படாது. இந்தியாவே திரும்பி பார்க்கும் விதமாக, தமிழக பள்ளிக்
கல்வித்துறை செயல்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.