
மிக அவசரம்/ /உள்ளாட்சி தேர்தல்-2017/ /தனி கவனம்/
ந.க.எண்.3452/அ1/2017 மாவட்டக் கல்வி அலுவலகம்,
நாள். 15.06.2017. திருச்சிராப்பள்ளி.
(நகல்) திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்தில் செயல்படும்
அனைத்து வகை அரசு / மான்ய / ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கும் உரிய விரைவு
நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக
மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவிருக்கும் 2017-ல்
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கு தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து
நிலைகளிலும் பணிபுரியும் அலுவலர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட
(ஓடு) படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து , கீழ்க்கண்ட ஆவணங்களினை
இணைத்து இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் மென்நகல்-1
(CD) மற்றும் வன்நகல்-2(உரிய இணைப்புகளுடன்) நேரில் ஒப்படைக்கத்
தெரிவிக்கப்படுகிறது.
1. ஜுன் 2017 ம் மாத ஊதிய பட்டியலுக்கான நுஊளு ஒளி நகல்-2.
2. வாக்காளர் அடையாள அட்டை ஒளி நகல்-2.
3. ஆதார் அடையாள அட்டை ஒளி நகல்-2.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஓடு படிவத்தினை பூர்த்தி
செய்திடும்பொழுது நுஊளு படிவத்தில் உள்ள பணியாளர்கள் எண்ணிக்கையுடன்
ஒப்பிட்டு நோக்கப்படவேண்டும். தவிர்ப்பு கோரும் பணியாளர்கள் இருப்பின்
அவர்களின் விண்ணப்பம், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரால் பரிந்துரைத்து
சான்றொப்பமிடப்பட்ட ஆவண நகல்கள் இரு நகல்களில் இணைத்து நுஊளு படிவ
எண்ணிக்கையினை சமன்படுத்தி தலைமையாசிரியரின் முகப்பு கடிதத்தில் 2017-ல்
உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை, தவிர்ப்பு கோருபவர்
எண்ணிக்கை ஆகியனவற்றைக் குறிப்பிட்டு இவ்வலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட
வேண்டும்.
மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட
தேர்தல் அலுவலரின் மேற்கண்ட கடிதத்தினைக் கருத்திற்கொண்டு காலதாமதத்தினை
தவிர்த்திடல் வேண்டும் எனவும், காலதாமதம் ஏற்படும் நிலையில்
எதிர்கொள்ளப்படும் அனைத்து விளைவுகளுக்கும் சார்ந்த பள்ளி
தலைமையாசிரியர்களே பொறுப்பாவார்கள் என்பதையும் தெரிவிக்கலாகிறது.
இணைப்பு:- XL படிவம்-1. மாவட்டக் கல்வி அலுவலர்,
திருச்சிராப்பள்ளி.