Skip to content

ABDUL KALAM AWARD FOR STUDENTS:

மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது

'அப்துல்கலாம் விருதுக்கு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம்' என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. 

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், பிறந்த நாளான, அக்., 15, குழந்தைகளின் படைப்புத்திறன் மற்றும் கண்டுபிடிப்புக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது. இந்த துறையின் கீழ் செயல்படும், தேசிய புதிய கண்டுபிடிப்புக்கான அறக்கட்டளை, அப்துல் கலாம் பெயரில், அறிவியல் விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தினசரி வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கான கண்டுபிடிப்புகள்; கலாசார ரீதியாக, முன்னோரிடம் புதுமையானவற்றை கற்று, அவற்றை பின்பற்றும் முறை; தங்களுக்கு தெரிந்த, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவோர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை அனுப்பலாம்.இந்த விருதுக்கு, ignite@nifindia.org என்ற,இ - மெயில் முகவரிக்கு, வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, ஜனாதிபதி விருது வழங்குவார். இதன் விபரங்களை, nif.org.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.