Skip to content

பொறியியல் கல்லூரிகளில் வீணாகும் 500 இடங்கள் :

பொறியியல் கல்லூரிகளில் வீணாகும் 500 இடங்கள்

சிவகங்கை, அரசு பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டுதோறும் 500 க்கும் மேற்பட்ட இடங்கள்
நிரப்பப்படாமலேயே வீணாகின்றன.
அவற்றிற்கும் கலந்தாய்வு நடத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள
583 பொறியியல் கல்லுாரிகளில் 1.67 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை
நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 17ல் துவங்கி, ஆக., 11 வரை நடந்தது. இதில் 89
ஆயிரம் இடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் பொறியியல் கல்லுாரிகளில் சேர்ந்த 2,240 பேருக்கு மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளன. அவர்கள் பொறியியல் கல்லுாரிகளில் இருந்து விலகி உள்ளனர்.அவர்கள் அரசு மற்றும் பிரபலமான தனியார் கல்லுாரிகளையும் முக்கியமான பாடப்பிரிவு
களையும் தேர்வு செய்திருந்தனர். அவர்கள்
விலகிய இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு
நடத்தப்படாமல் அப்படியே விடப்படுகிறது. சில தனியார் கல்லுாரிகள் மட்டும் அந்த
இடங்களை நிரப்பி விடுகின்றன. ஆனால் அரசு கல்லுாரிகள் நிரப்புவதில்லை. இதனால்
ஆண்டுதோறும் 500 க்கும் மேற்பட்ட இடங்கள்
நிரப்பப்படாமலேயே வீணாகின்றன.
அவற்றிற்கும் கலந்தாய்வு நடத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர்கள் கூறியதாவது: 'கட் ஆப்'
அடிப்படையில் பாடப்பிரிவுகள் கிடைக்
கின்றன. மருத்துவ கல்லுாரிக்கு சென்ற
மாணவர்கள் இன்ஜினியரிங்கிலும் நல்ல 'கட்ஆப்' எடுத்தவர்கள். அவர்கள் விலகிய இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தினால், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காதோருக்கு, மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.