Skip to content

7TH PAY COMMISSION VS SECONDARY GRADE TEACHERS SALARY:

சில ஆசிரியர்களுக்கு
நாம் (2009 after teachers)மட்டும் ஏன் தனித்து குழுக்கள் ஆரம்பிக்க வேண்டும், தனித்து போராட வேண்டிய அவசியம் என்ன?   என்ற  சந்தேகம் உள்ளது,

குறிப்பாக CPS போராட்டத்தில் 2003 after teachers எல்லோரும் சேர்ந்து கலந்து கொண்டோம்

இப்போது மட்டும் நாம் தனித்து போராட வேண்டிய அவசியம் என்ன?

2009க்கு முந்தைய இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவில் ஒரு நல்ல ஊதியம் பெறுகிறார்கள்,  ஏனெனில் அவர்கள் அடிப்படை ஊதியத்தில் ஏற்கனவே 1.86 ஆல் பெருக்கப்பட்டு ஊதியம் பெறுகின்றனர்,

(2009 after teachers ) நமக்கு அவ்வாறில்லை
குறிப்பாக


2008ல் நியமனம்  பெற்ற இடைநிலை ஆசிரியர் மொத்த ஊதியம் 43320. (2800 தர ஊதியம்)

2009ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் மொத்த ஊதியம் 29055. (2800 தர ஊதியம்)

ஊதிய வேறுபாடு 14265

ஒரே ஒரு ஆண்டின் ஆண்டு ஊதிய உயர்வு ரூ 1000 மட்டுமே வித்தியாசம் வர வேண்டும்...
ஆனால் 14000 வித்தியாசம்😭

இடைநிலை ஆசிரியர்களுக்கு பல இழப்புகள் உள்ளது ஆனால்

2006  இடைநிலைஆசிரியர்--
2007 இடைநிலைஆசிரியர் ஊதிய வேறுபாடு ----2000

2007  ஆசிரியர்
2008இடைநிலைப் ஆசிரியர்ஊதிய வேறுபாடு ----2000

2008 -இடைநிலை ஆசிரியர்
2009இடைநிலை ஆசிரியர் ஊதிய  வேறுபாடு- 14500

முதலில் இந்த ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும்
என்பதே  2009,tet2012 ,tet2014 ஆசிரியர்களின் மனக்குமுறலாக உள்ளது,

நம்முடன் பணி புரியும்
சக ஆசிரியரின் மாநிலத்திற்கு
இணையான ஊதியம் கூட இல்லாமல் பணி புரிவது எவ்வளவு வேதனையை
அளிக்கும் என்பதை எல்லோரும் ஒரு நிமிடமாவது  எண்ணிப் பாருங்கள்

யாருக்கு மிகப்பெரிய பதிப்பு ?

எந்த பிரச்சனை முதலில் களையப்பட வேண்டும்?

எல்லோரும் சிந்தித்து பாருங்கள்! உங்கள் மனசாட்சி உங்களுக்கு பதில் சொல்லும்


சமவேலை சம ஊதியம் (1.86)
என்ற கோரிக்கை

மாநிலத்தில் பணிபுரியும் சக ஆசிரியரின் ஊதியத்தையாவது பெறுவோம் என்ற அடிப்படைச்
சிந்தனையில்

ஒற்றை கோரிக்கைக்காக எவ்வித எதிர்ப்பையும் தாண்டி
எவ்விதமான போராட்டம் என்றாலும் களம் காண
தயார் நிலையில் உள்ளோம்

இந்த நிலைப்பாடு
வெற்றியை நோக்கிச் செல்லமுடியும் என்பதே நிதர்சனம்

இந்த 4200 G.P கேட்டு போராட அழைக்கும் நமது  நண்பர்களுடன்

விவாதங்கள் வேண்டாம்

நாம் கேட்பது மாநிலத்திற்கு இணையான ஊதியம்
ஆனால் அவர்கள் கேட்பது மத்திய அரசுக்கு இணையான ஊதியம்

உணவு போதவில்லை என்பதற்கும்
உணவே கிடைக்கவில்லை என்பதற்கும் உள்ள வேறுபாடே

நம் புரதலில் சற்று வேறுபாடு

எனினும் நாம் அனைவரும்  தோழர்களே!?

1.86 என்ற ஒற்றைக் கோரிக்கை நோக்கி நாங்கள் போராடுகிறோம் எங்கள் வலிகளை அறிந்து
நீங்கள் ஆதரவு தந்தால்
மகிழ்வோம் என்று
சொல்லிவிடுங்கள்


நாம் செல்வது சரியான பாதையே


தனித்து ஒற்றை கோரிக்கையாக போராடி  1.86 கேட்டால் 21000 பேருக்கு
கிடைக்க வாய்ப்புண்டு


அல்லாமல் நாமும்
கூட்ட்த்தோடு
4200 G.P  தான் வேண்டும் என்று போராடினால்

அவ்வளவு நிதியும் இல்லை சாத்தியமும் இல்லை என அரசு கை விரிக்கும்

மற்றவர்கள் சிறிது ஏமாற்றத்துடன் கலைந்து செல்வார்கள்

நாம் இரத்தக் கண்ணீருடன் நடுதெருவில் நிற்க வேண்டியது வரும்

நமது துன்பம் களைய ஒரே கோரிக்கை 1.86
(சம வேலைக்கு சம ஊதியம்)

1.86க்கு மட்டுமேதான்

போரட்டமா?

இல்லை !இல்லை! வாடிப் போனவர்கள் 1.86 ஆல்
கொஞ்சமாவது  துளிர் விடுகிறோம்

தன்னிறைவு என்பது 4200 G.P பெறுவதுதான்

படுகுழியில் உள்ளோம்
முதலில் 1.86 ஏணியால்
சம நிலைத்தை அடைவோம்

அதன் பின்னர்
4200,, G.P ,  CPS ஒழிப்பு
போன்ற இ்லக்குகளை நோக்கி கைகோர்த்து முன்னேறுவோம்


குறைந்த செலவு வைக்கும்
21000 பேருக்கு 1.86 கொடுக்கவே அரசு யோசிக்குமானால்

21 மாத நிலுவை ,
4200 G.p ,CPS ஒழிப்பு போன்றவற்றை அரசு நிறைவேற்றுமா?



21 மாத நிலுவை ,
4200 G.p ,CPS ஒழிப்பு போன்றவற்றையே
சங்கங்கள் போராடி  பெற முடியும் எனில்

எங்கள் 21000 பேருக்கு
1.86 பெற்றுத் தருவது
மிக மிக எளிதே!

முதலில் 1.86 என்ற இலை தழைகளை வைத்து எங்கள் மானத்தை மறைத்துக் கொள்கிறோம்

பின்பு
4200 G.P ஆடை  கேட்கும் போராட்டத்திற்கு கட்டாயம் வருவோம்

எங்கள் வலிகளை புரிந்து கொள்ளுங்கள்

கலங்கரை விளக்கு தேடி தனியாக  படகில்
பயணம் செய்ய எத்தனிக்கிரோம்

Cps, 4200 என்ற பெரிய கப்பல்கள் பின்னால் சென்றால் எங்கள் மீது கலங்கரை விளக்கு ( அரசு) வெளிச்சம் படாதோ? என்ற பரிதவிப்பில்........

மற்றபடி நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் இனமே