Skip to content

7TH PAY COMMISSION |தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2 1/2 மடங்கு ஊதிய உயர்வு, ( பொது மக்கள் ஆவேசம்... ! ! )

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு  2  1/2  மடங்கு ஊதிய உயர்வு,  ( பொது மக்கள் ஆவேசம்... ! ! )

ஊடகங்கள் சொல்வது முற்றிலும் தவறான தகவல்.....
 உண்மைக்கு புறம்பான தகவல்..

உதாரண கணக்கீடு
 முழு விவரம் பின்வருமாறு

 ஒரு இளநிலை உதவியாளரின் ( துவக்க நிலை ) அடிப்படை ஊதியம்
ரூ.5,200 + தர ஊதியம்
ரூ.2,400   மொத்தம்
ரூ.7,600
இவற்றில்...  ( ரூ.7,600 க்கு அகவிலைப்படி ரூ.10,336 சேர்த்து ஆக மொத்தம் ரூ.17,936 சம்பளம் பெற்று வருவது ஆகும் )
 தற்போது பெற்றுவரும் 136 % அகவிலைபடி

 ரூ.10,336 
 இந்த தொகை ஊதிய உயர்வில் அடக்கம் இல்லை.

 மேற்சொல்லப்பட்ட மருத்துபடி & வீட்டு வாடகைபடி தவிர்த்து

தற்போது ( current pay ) பெற்று வரும் மொத்த ஊதியம்
மொத்தம் ரூ.17,936
 ( இதுவே உதாரண உண்மை )

இவற்றில் அடிப்படை ஊதியம் + தர ஊதியம் சேர்த்து வரும்
ரூ. 7,600  ல்  ×  2.57 (மடங்கு)  =  ரூ.19,532 இதுதான் ஊதிய உயர்வு தொகை.
 இந்த, தொகைக்கு புதிய ஊதிய நிர்ணயப்படி 5 % மட்டும்
 = ரூ.977  அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.19,532 வுடன்
 ரூ.    977  கூட்டினால் வரும்... மொத்த தொகை
ரூ.20,509
ஆக  மொத்தம்  சம்பளம்
இதுவே மிக சரியான உதாரண  தொகை

 இவற்றில் ஏற்கனவே பெற்று வரும்
ரூ.17,936 ஐ கழித்தால்
 மீதம் வரும் தொகை
  ( அதாவது அரசு ஊழியர் பயன் பெறும் சம்பள உயர்வு )
ரூ. 2,573  மட்டும்  தான்
இதுவே
உண்மையான
ஊதிய உயர்வு
தொகை



ஊடகங்கள்.....
மிகைப்படுத்தி வருகின்றன...
 ஊழியர் பெற்று வரும்
மொத்த சம்பளத்தில்
30 % வரை ஊதிய உயர்வு என்று ஊடகங்கள்  சொல்வது தவறான தகவல்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.

 நமது தமிழ்நாடு அரசு 11/10/2017 புதன்கிழமை
இணையதளத்தில் அரசாணை வெளியிட்டுள்ளது

தயவு செய்து அவற்றை ( அரசாணையினை ) முழுமையாக படித்து பார்த்து  நன்கு அதை நன்றாக படித்த பிறகு உண்மையினை தெரிந்து கொண்டு
பிறகு விமர்சனங்கள் செய்யுங்கள் என பொதுமக்கள் வேண்டப்படுகிறார்கள்.

அதை விடுத்து அரசு ஊழியர்கள் மீது  வெறுப்பு கொண்டு  தவறான வதந்தி பரப்ப வேண்டாம் என சமூக வலைத்தள நண்பர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

 சும்மா சும்மா பொய்  தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தால் அது உண்மை ஆகிவிடாது.

உண்மை என்றுமே உண்மைதான்.
பொய் என்றுமே பொய்தான்.

தயவு செய்து வீண் வதந்திகளை பரப்புரை செய்யாதீர்கள்.

 Maximum
98 % of Government Servants have
 Festival Loan,
 GPF Loan,
Society' Loan,
Bank Personal Loan,  Bank Loan (other source) Housing Loan,
Two Wheeler Loan,
Car Loan (Officers level), Children's Marriage Loan, 
Education Loan & Kadi Kraft Loans

பெரும்பாலான 98 % விழுக்காடு அரசு ஊழியர்களுக்கு மேற்படி கடன்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்... ???
பொது மக்கள் இதை அறிவார்களா....????

 அரசு ஊழியர்கள் குடும்பத்தின் மீது உண்மை அறியாமல் வசை பொழியும் உறவினர்களும் நட்புகளும் மற்றவர்களும்தான் இந்த கடன்களை அடைப்பார்களா...???

தயவு செய்து உண்மையாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் தர்மத்திற்கு உட்பட்டு சிந்திக்கவும் + பேசவும்  கற்றுக்கொள்ளுங்கள்.

அரசு ஊழியர்களுக்கு
இரண்டரை மடங்கோ
அல்லது
மூன்று மடங்கோ மொத்த ஊதியம் உயர்த்தி வழங்க வல்லரசு நாடுகள் என சொல்லப்படும் அமெரிக்கா , சீனா & ரஷ்யா வால் கூட முடியாது

தயவு செய்து இந்த பதிவை அனைவருக்கும் பகிருங்கள்
அப்போதாவது சமூகவளைதள நண்பர்கள் உண்மையினை தெரிந்துகொள்ளட்டும்...

நண்பர்கள் பகிர வேண்டுகிறேன்..

இப்படிக்கு
பாவப்பட்ட அரசு ஊழியர்கள்.