நவோதயா பள்ளிகள் அரசின் நிலை?: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்குவது குறித்து, முதல்வரிடம் பேசி, 
அமைச்சரவை கூடி கொள்கை ரீதியாக முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி அமைச்சர் 
செங்கோட்டையன் தெரிவித்தார்.
போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் உள்ள நுாலகங்களில், முதலில், நுழைவு 
தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும். தொடர்ந்து, பள்ளிகளிலும் 
நடத்தப்படும். கல்வி தொடர்பாக, மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை 
மட்டுமே, நுாலகங்களுக்கு வாங்கவேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், 
யாருக்கும், 'கமிஷன்' தர வேண்டாம்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்குவது 
குறித்து, முதல்வரிடம் பேசி, அமைச்சரவை கூடி கொள்கை ரீதியாக முடிவு 
செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.மரம் நட்டு, அதை வளர்த்து வரும் 
மாணவர்களுக்கு, ஐந்து மதிப்பெண் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். 
இதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
.jpeg)



