Skip to content

NEET EXAM RELATED NEWS:

'நெட்' தேர்வு: ஹால் டிக்கெட

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், கல்லுாரி, பல்கலைகளில் உதவி பேராசிரியராக சேர, 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதேபோல், முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின் உதவித்தொகையுடன், ஆராய்ச்சி படிப்பில் சேரவும், 'நெட்'தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான தேர்வு, நவ., ௫ல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், ௯௧ நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில், ௫௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட் ெவளியிடப்பட்டது. அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், தபாலில் அனுப்பப்பட மாட்டாது என்றும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.