Skip to content

SCHOOL EDUCATION DEPARTMENT | 10TH mARK SHEET rEGARDING:

10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு

அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறையின், சென்னை மண்டல துணை இயக்குனர், ராஜலட்சுமி அறிவிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 2008 முதல், 2012 அக்., வரை எழுதியவர்களில் பலர், தங்கள் சான்றிதழ்களை கோராமல் உள்ளனர்.

அவற்றை அழிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.அதனால், அக்., 31 வரை, அந்த சான்றிதழை பெற, அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், பெயர்,பதிவெண், தேர்வு மையம், ஆண்டு, மாதம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள் அழிக்கப்படும். இனி வரும் காலங்களில், இரண்டு ஆண்டு முடிந்த பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள், முன்னறிவிப்பு இன்றி அழிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.