Skip to content

ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவு.

images%2528129%2529

கொரோனா ஒழிப்பு தொடர்பான, 'ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகள், கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள் அனைவரும், Arokya setu மற்றும் IVRS Covid - 19 ஆகிய மொபைல் போன் செயலிகளையும், பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகள், அலுவலகங்களில் பணி புரியும் அனைவரும், இவ்விரு செயலிகளையும் பயன்படுத் துவதை உறுதிசெய்து, அதற்கான அறிக்கையை பூர்த்திசெய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.