Skip to content

இந்த வருடம் மட்டும் நீட் தேர்வு வேண்டாம்! ராகுல் காந்தி ட்வீட்!


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ முதன்மைத் தேர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதியும் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசியலை கட்சி தலைவர்களும் இதே கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார், அதில், "ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு தொடர்பான மாணவர்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்றும், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவை மத்திய அரசு எட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி கல்வி அமைச்சருமான மனிஷ் சிசோடியா நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.